நிர்பயா குற்றவாளிகள் கழுத்துக்கு தூக்குபோட்டவருக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

By vinoth kumarFirst Published Mar 20, 2020, 10:58 AM IST
Highlights

டெல்லி திஹார் சிறையில் உள்ள தூக்கு மேடையில் காலை 5.37 மணிக்கு 4 குற்றவாளிகளும் தூக்கிலிடப்பட்டனர். நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் 8 ஆண்டுகளுக்கு பிறகு நிர்பயா குற்றவாளிகள் 4 பேரும் தூக்கிலிடப்பட்டனர். 4 குற்றவாளிகளையும் தூக்கிலிட பவனுக்கு தலா ரூ. 20000 என ரூ. 80,000 ஊதியமாக தரப்படுகிறது. ஒரே நேரத்தில் 4 பேரை தூக்கிலிட்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

நிர்பயா குற்றவாளிகள் 4 பேரை தூக்கிலிட்ட பவன் ஜல்லாட்டுக்கு தலா ரூ.20,000 நான்கு பேர் வீதம் என ரூ.80,000 சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

டெல்லியில் மருத்துவ படிப்பு மாணவி நிர்பயா 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ல் 6 பேர் கும்பலால் ஓடும் பேருந்தில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வளையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, இந்த சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இதையும் படிங்க;- விதவையாக வாழ விரும்பவில்லை... டைவர்ஸ் கேட்கும் நிர்பயா குற்றவாளியின் மனைவி..!

இதனிடையே, முக்கிய குற்றவாளியான ராம்சிங், திகார் சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். மற்றொரு குற்றவாளி சிறுவன் என்பதால், சிறார் நீதிமன்றத்தில் அதிகபட்ச தண்டனையாக 3 ஆண்டு விதிக்கப்பட்டு சிறைவாசத்தை முடித்து மத்திய அரசு கண்காணிப்பில் இருந்து வருகிறான். இந்நிலையில், முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் சர்மா மற்றும் அக்‌ஷய் குமார் சிங் 4 குற்றவாளிகளுக்கும் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் மேல்முறையீடு செய்த போதும் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டதால் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. 

இதனையடுத்து, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், குடியரசுத் தலைவருக்கு கருணை மனு உள்ளிட்ட அடுத்தடுத்து மனுவால் 3 முறை தண்டனை ஒத்திவைக்கப்பட்டது. மேலும், சட்டத்தில் உள்ள ஓட்டைகள் மற்றும் சட்ட ரீதியில் தங்களுக்கு உள்ள அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திவிட்டனர்.  பல்வேறு சிக்கலுக்கு இடையே இன்று காலை குற்றவாளிகளை தூக்கிலிடுவது உறுதி செய்யப்பட்டது. இதனிடையே, 4 பேரையும் தூக்கிலிடும் பணிக்கு உத்தரபிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த பவன் ஜல்லாட் என்ற தூக்கிலிடும் ஊழியரின் சேவையை பயன்படுத்த திகார் சிறை நிர்வாகம் முடிவு செய்து அவரை வரவழைத்தது. 

இதையும் படிங்க;-  பலான இடத்தில் கை வைத்து மகளுக்கு பாலியல் தொல்லை.. பள்ளியில் வைத்து எட்டி எட்டி உதைத்து செருப்படி கொடுத்த தாய்

பின்னர், 4 குற்றவாளிகளையும் தூக்கிலிட பவனிடம் 8 மணிலா தூக்கு கயிறுகளை சிறைத்துறை அதிகாரிகள் அளித்தனர். அதில், நான்கை தேர்ந்தெடுத்தார். இறுதியில் டெல்லி திஹார் சிறையில் உள்ள தூக்கு மேடையில் காலை 5.37 மணிக்கு 4 குற்றவாளிகளும் தூக்கிலிடப்பட்டனர். நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் 8 ஆண்டுகளுக்கு பிறகு நிர்பயா குற்றவாளிகள் 4 பேரும் தூக்கிலிடப்பட்டனர். 4 குற்றவாளிகளையும் தூக்கிலிட பவனுக்கு தலா ரூ. 20000 என ரூ. 80,000 ஊதியமாக தரப்படுகிறது. ஒரே நேரத்தில் 4 பேரை தூக்கிலிட்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

click me!