சிறார் என கெஞ்சிய பவன் குப்தாவின் மனு நிராகரிப்பு... தூக்கை உறுதி செய்த உச்சநீதிமன்றம்..!

By vinoth kumarFirst Published Jan 20, 2020, 3:54 PM IST
Highlights

டெல்லியை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவியை கடந்த 2012-ம் ஆண்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 6 பேர் கும்பல் அவரை ஓடும் பேருந்தில் தள்ளி கொடூரமாக கொலை செய்தது. இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த பலாத்கார கொலை வழக்கில் தொடர்புடைய ஒரு குற்றவாளி சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது. 

டெல்லியை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவியை கடந்த 2012-ம் ஆண்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 6 பேர் கும்பல் அவரை ஓடும் பேருந்தில் தள்ளி கொடூரமாக கொலை செய்தது. இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த பலாத்கார கொலை வழக்கில் தொடர்புடைய ஒரு குற்றவாளி சிறையில் தற்கொலை செய்து கொண்டார். மற்றொரு மைனர் குற்றவாளி தண்டனையை  நிறைவு செய்துவிட்டான். மீதமுள்ள 4 குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங் (32), வினய் சர்மா (26), அக்‌ஷய் குமார் சிங் (31), பவன் குப்தா (25) ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. வரும் 22-ம் தேதி இவர்களின் தூக்கு தண்டனையை நிறைவேற்றும்படி டெல்லி நீதிமன்றம் கடந்த 7-ம் தேதி உத்தரவிட்டது.

இதையும் படிங்க;- என்னை சோனியா காந்தியை போல செய்ய சொல்ல நீங்கள் யார்..? இதெல்லாம் ஒரு பொழப்பா... வழக்கறிஞரை அலறவிட்ட நிர்பயாவின் தாயார்..!

இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங், குடியரசுத் தலைவர் கருணை மனுவை அனுப்பினார். அதை குடியரசுத் தலைவர் நேற்று முன்தினம் நிராகரித்தார். இவ்வாறு கருணை மனு நிராகரிக்கப்பட்டபின் 2 வாரம் இடைவேளை இருக்க வேண்டும் என்பதால், கொலை குற்றவாளிகளுக்கான மரண தண்டனையை பிப்ரவரி 1-ம் தேதிக்கு டெல்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இதனடிடையே, மற்றொரு குற்றவாளியான பவன் குப்தா, குற்றம் நடந்தபோது தான் மைனர் என்பதை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில் தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்திவைக்கும்படி அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷன் மற்றும் ஏ.எஸ் போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து பவன்குமார் குப்தாவின் தூக்கு தண்டனை உறுதியாகியுள்ளது.

click me!