மத்திய பட்ஜெட்டுக்கு இப்போதே அல்வா கொடுக்கத் தயாராகும் நிர்மலா சீதாராமன்..!

By vinoth kumarFirst Published Jan 20, 2020, 1:27 PM IST
Highlights

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2020-21-ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்கிறது. 
இந்நிலையில், 2020-2021-ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கு மரபுப்படி, அல்வா வழங்கப்பட்டு, அச்சடிப்புப்பணி இன்று தொடங்கியது.

மத்திய நிதியமைச்சகத்தில் பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அல்லா வழங்கி பட்ஜெட் அச்சிடும் பணியை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். 

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2020-21-ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்கிறது. இந்நிலையில், 2020-2021-ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கு மரபுப்படி, அல்வா வழங்கப்பட்டு, அச்சடிப்புப்பணி இன்று தொடங்கியது.

இதையும் படிங்க;- ரஜினி பற்றி மூச்சு விடக்கூடாது..! அமைச்சர்களுக்கு, நிர்வாகிகளுக்கு எடப்பாடியார் விட்ட டோஸ்..!

இந்த நிகழ்ச்சி நிதியமைச்சகம் அமைந்திருக்கும் நார்த் ப்ளாக்கில் நடைபெறுகிறது. இதில், நிதியமைச்சர், நிதியமைச்சகத்தின் உயர் அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக இந்த அல்வா வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அல்வா கிண்டி விட்டால், பட்ஜெட் பணிகள் தொடங்கி விட்டன என்று அர்த்தம்.

மிகவும் சுவை மிக்க அல்வா எனும் இந்திய இனிப்பு பதார்த்தம், மிகப்பெரிய பாத்திரத்தில் தயாரிக்கப்படுகிறது. இதனை நிதியமைச்சர் அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் வழங்கினார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும், பட்ஜெட் தயாரிப்பு மற்றும் ஆவணங்களை அச்சிடும் பணி நார்த் ப்ளாக்கில் 10 நாட்களுக்கு நடைபெறும்.இதில், ஈடுபட்டிருப்பவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். செல்போன் தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் அவர்களுக்கு விதிக்கப்படும். பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் உரை வாசித்து முடித்த பின்னர்தான், நார்த் ப்ளாக்கிலிருந்து அதிகாரிகள், ஊழியர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க;- ரஜினி பற்றி மூச்சு விடக்கூடாது..! அமைச்சர்களுக்கு, நிர்வாகிகளுக்கு எடப்பாடியார் விட்ட டோஸ்..!

ஆனால், நெட்டிசன்கள் ஏற்கனவே இந்தியா பொருளாதாரம் வீழ்ச்சியில் தத்தளித்து வரும் நிலையில் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட் நிலைமை குறித்து இப்போதே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்லா கொடுத்துவிட்டார் கிண்டல் செய்து வருகின்றனர். 

click me!