அமித்ஷா இடத்தை பிடித்த ஜே.பி.நட்டா... பாஜகவில் நடந்த அதிரடி..!

By vinoth kumarFirst Published Jan 20, 2020, 3:19 PM IST
Highlights

கடந்த 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தபோது கட்சித்தலைவர் பதவி வகித்தவர் ராஜ்நாத் சிங். அவர் அப்போது பிரதமர் மோடி அமைச்சரவையில் உள்துறை அமைச்சரானார். ஒருவருக்கு ஒரு பதவி என்ற விதி, அந்த கட்சியில் பின்பற்றப்படுகிறது. அதன் அடிப்படையில், 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 9-ம் தேதி, பாஜக கட்சிக்கு அமித் ஷா தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

பாஜகவின் புதிய தேசிய தலைவராக ஜே.பி.நட்டா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிய தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பூங்கொத்து வழங்கி வாழ்த்தினார்.

கடந்த 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தபோது கட்சித்தலைவர் பதவி வகித்தவர் ராஜ்நாத் சிங். அவர் அப்போது பிரதமர் மோடி அமைச்சரவையில் உள்துறை அமைச்சரானார். ஒருவருக்கு ஒரு பதவி என்ற விதி, அந்த கட்சியில் பின்பற்றப்படுகிறது. அதன் அடிப்படையில், 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 9-ம் தேதி, பாஜக கட்சிக்கு அமித் ஷா தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இவர் தலைமையில் பாஜக அடுத்தடுத்து பல்வேறு மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் வெற்றி பெற்றது. தொடர்ந்து, 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் அமோக வெற்றி பெற்று, பிரதமராக மோடி 2-வது முறை பொறுப்பேற்றதும் தனது அமைச்சரவையில் 2-வது இடமான உள்துறை அமைச்சர் பதவியை அமித்ஷாவுக்கு வழங்கினார்.

இதையும் படிங்க;- இஸ்லாமிய அமைப்புகளுக்கு அடுத்த அதிர்ச்சி... எஸ்.டி.பி.ஐ., பி.எப்.ஐ. அமைப்புகளுக்கு தடை..? சாட்டையை சூழற்றும் பாஜக முதல்வர்..?

இதனையடுத்து, கட்சித் தலைவர் பதவியை அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும். ஆனால், அவரது பதவிக்காலம் கடந்த டிசம்பருடன் முடிவடைய இருந்ததால், அதுவரை அவர் தொடரலாம் என அப்போது முடிவெடுக்கப்பட்டது. இதற்கிடையே, பாஜகவில் புதிதாக செயல் தலைவர் என்ற பதவி உருவாக்கப்பட்டு, அதில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா நியமிக்கப்பட்டார். அவர் தற்போது அந்த பதவியில் உள்ளார். 

இதற்கிடையே, பாஜக தேசிய தலைவர் தேர்தல் இன்று நடைபெற்றது. போட்டியிட விரும்புபவர்கள் காலை 10 மணி முதல் 12.30 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். ஆனால், ஜே.பி.நட்டாவை தவிர வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. ஆகையால், ஜே.பி.நாட்டா போட்டியின்றி புதிய தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அமித்ஷா பூங்கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். 

இதையும் படிங்க;- என்னை சோனியா காந்தியை போல செய்ய சொல்ல நீங்கள் யார்..? இதெல்லாம் ஒரு பொழப்பா... வழக்கறிஞரை அலறவிட்ட நிர்பயாவின் தாயார்..!

ஜே.பி.நாட்டாவின் வரலாறு;-

இமாச்சலப் பிரதேசத்தில் பிறந்த ஜே.பி.நட்டா, அந்த மாநில சட்டப்பேரவைக்கு 1993, 1998 தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்பின், மாநிலங்களவைக்கு தேர்வானார். கடந்த முறை பிரதமர் மோடி அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தார். தற்போது அமைச்சர் பதவியில் இல்லாத அவர் கட்சியின் தேசிய தலைவராக பதவியேற்றுள்ளார். இதனையடுத்து, தமிழக பாஜக தலைவர் அடுத்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

click me!