சிபிஐ எடுத்த அதிரடி ஆக்சன் !! கடன் மோசடி வழக்கில் நிரவ் மோடியின் நெருங்கிய உதவியாளர் கைது..

Published : Apr 12, 2022, 09:44 AM ISTUpdated : Apr 12, 2022, 09:47 AM IST
சிபிஐ எடுத்த அதிரடி ஆக்சன் !! கடன் மோசடி வழக்கில் நிரவ் மோடியின் நெருங்கிய உதவியாளர் கைது..

சுருக்கம்

விஜய் மல்லையா, நிரவ் மோடி உள்ளிட்டோர், பஞ்சாப் வங்கி, எஸ்பிஐ உள்ளிட்ட சில வங்கிகளில் கடனை வாங்கிவிட்டு, சொல்லாமல் கொள்ளாமல் நாட்டை விட்டு வெளியேறிவர்கள் ஆவார்கள்.இவர்களை எப்படியேனும் இந்தியா அழைத்து வர வேண்டும் என வங்கிகள் கடும் முயற்சிகளை எடுத்து வருகின்றன. இது குறித்தான வழக்கும் நடந்து வருகின்றது.

கிங்பிஷர் நிறுவனத்தின் விஜய் மல்லையா இங்கிலாந்திலும், அதேபோல பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி மோசடி செய்த நிரவ் மோடி லண்டனிலும், இதே வழக்கில் சம்பந்தப்பட்ட மொகுல் சோக்சி கடந்த ஆண்டு கரிப்பியன் தீவான ஆண்டிகுவாவில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடியில் ஈடுபட்ட புகாரில் சிக்கியுள்ள பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, லண்டனுக்கு தப்பிச் சென்றார்.  இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று அங்கு அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த மாவட்ட நீதிமன்ற நீதிபதி சாம் கூசி உத்தரவிட்டார். 

அதனை எதிர்த்து லண்டன் நீதிமன்றத்தில் நிரவ்மோடி தரப்பு மனுதாக்கல் செய்தது. அந்த மனு, விசாரணைக்கு வந்த போது, நிரவ் மோடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நிரவ்மோடி மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர் மும்பை சிறையில் அடைக்கப்பட்டால் அங்கு தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் மனநல நிபுணர் சான்றிதழ் கொடுத்திருப்பதாகக் கூறியிருந்தார்.

இந்நிலையில், பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,578 கோடி மோசடி செய்த வழக்கில் தொடர்புடைய நீரவ் மோடியின் நெருங்கிய உதவியாளர் சுபாஷ் சங்கரை, சிபிஐ எகிப்தின் கெய்ரோவிலிருந்து மும்பைக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். கூடிய விரைவில் நிரவ் மோடியும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாக். ஆதரவுடன் ஜெய்ஷ், லஷ்கர் பயங்கரவாதிகள் ரகசிய சந்திப்பு! இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி!
மக்களின் துயரத்தை பேசாத பிரதமர்.. எப்போதும் நேரு பற்றியே கவலை.. மோடியை சாடிய காங். எம்.பி.!