நியூஸ்கிளிக் இணையதள நிறுவனர் பிரபீர் புர்காயஸ்தா கைது! சீனாவில் இருந்து பணம் பெற்ற குற்றச்சாட்டில் நடவடிக்கை

By SG Balan  |  First Published Oct 4, 2023, 8:01 AM IST

சீனாவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நிறுவனங்களிடமிருந்து நியூஸ்கிளிக் செய்தி இணையதளம் கிட்டத்தட்ட 38 கோடி ரூபாய் பெற்றுள்ளதாகவும், அதற்குப் பதிலாக இணையதளத்தில் சீனாவுக்கு ஆதரவான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.


நியூஸ் கிளிக் இணையதளத்தின் நிறுவனர், பத்திரிகையாளர் பிரபீர் புர்காயஸ்தா, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட விசாரணை அறிக்கை ஒன்றில், இந்தியாவில் சீனாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய நிதி பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரபீர் புர்காயஸ்தாவுடன் நியூஸ் கிளிக் நிறுவனத்தின் மனிதவளப் பிரிவு தலைவர் அமித் சக்ரவர்த்தியும் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள நியூஸ்கிளிக் நிறுவனத்தின் அலுவலகத்திற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, டெல்லி மற்றும் மும்பை முழுவதும் உள்ள சுமார் 20 இடங்களில் நியூஸ் கிளிக்குடன் தொடர்புடைய பத்திரிகையாளர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

Latest Videos

undefined

இந்த சோதனைக்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சிகள், இது பத்திரிகை சுதந்திரத்தின் மீதான ஒடுக்குமுறை என்று விமர்சித்துள்ளன.

இயற்பியல் நோபல் பரிசு 2023: எலெக்ட்ரான் ஆய்வுக் கருவிகளைக் கண்டுபிடித்த 3 பேருக்கு அறிவிப்பு

"சந்தேகத்துக்கு இடமான 37 ஆண்கள் மற்றும் 9 பெண்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் டிஜிட்டல் சாதனங்கள், ஆவணங்கள் போன்றவை பரிசோதனைக்காகக் கைப்பற்றப்பட்டுள்ளன. நடவடிக்கைகள் இன்னும் தொடர்கின்றன; இதுவரை, பிரபீர் புர்காயஸ்தா மற்றும் அமித் சக்ரவர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என டெல்லி காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

சீனாவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நிறுவனங்களிடமிருந்து நியூஸ்கிளிக் செய்தி இணையதளம் கிட்டத்தட்ட 38 கோடி ரூபாய் பெற்றுள்ளதாகவும், அதற்குப் பதிலாக இணையதளத்தில் சீனாவுக்கு ஆதரவான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.

ஏற்றுமதி சேவைகளுக்கான கட்டணமாக 29 கோடியும், பங்கு விலையை உயர்த்தியதன் மூலம் 9 கோடி அன்னிய நேரடி முதலீடும் பெறப்பட்டதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சோதனைகள் தொடங்கிய சில மணி நேரங்களில் அறிக்கை வெளியிட்ட, இலாப நோக்கற்ற பத்திரிகையாளர்களின் அமைப்பான எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா, பத்திரிகை சுதந்திரம் கேள்விக்குள்ளாவதாகக் கவலை தெரிவித்துள்ளது.

பட்டைய கிளப்பும் டாடா நெக்ஸான் EV ஃபேஸ்லிப்ட் மாடல்! 465 கி.மீ. ரேஞ்ச் கொடுக்கும் சூப்பர் எலெக்ட்ரிக் கார்!

click me!