இரு நாட்களில் 31 பேர் மரணம்.. சர்ச்சையை கிளப்பிய அரசு மருத்துவமனை - டீனை விட்டு கழிவறையை கழுவ சொன்ன எம்பி!

By Ansgar R  |  First Published Oct 3, 2023, 6:56 PM IST

மகாராஷ்டிர மாநிலம் நாந்தேடில் உள்ள அரசு மருத்துவமனையில், வெறும் 48 மணி நேரத்தில், 31 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த மருத்துவமனையில் அழுக்கடைந்த நிலையில் இருந்த கழிவறையை, அம்மாநிலத்தை ஆளும் சிவசேனாவைச் சேர்ந்த எம்பி ஒருவர் அறிவுறுத்தியதையடுத்து, அந்த மருத்துவமனை டீனு அதை சுத்தம் செய்துள்ளார். 


31 பேர் மரணமடைந்த செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சிவசேனா (ஷிண்டே பிரிவு) எம்பி ஹேமந்த் பாட்டீல், இன்று செவ்வாய்க்கிழமை சங்கர்ராவ் சவான் அரசு மருத்துவமனைக்குச் சென்று, அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்தார். அப்போது அசுத்தமான கழிவறையைக் கண்டதும், திரு. பாட்டீல், மருத்துவமனையின் டீன் ஷியாம்ராவ் வாகோடைப் அழைத்து, அதைச் சுத்தம் செய்யும்படி அறிவுறுத்தியுள்ளார். 

இணையத்தில் வெளியான வீடியோவில், அந்த ​​எம்.பி தண்ணீரை கழிவறைக்குள் பீய்ச்சி அடிக்க, அதை அந்த டீன் உள்ளே நின்று சுத்தம் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. நேற்று திங்களன்று, மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 24 இறப்புகள் பதிவாகியுள்ளன, மேலும் செவ்வாய்கிழமை அந்த எண்ணிக்கை 31 ஆக உயர்ந்தது. அதுமட்டுமில்லாமல் 71 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

Latest Videos

undefined

பிரதமர் மோடியின் மன் கி பாத்.. நாட்டில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது? - ஆய்வு செய்த SBI - IIM பெங்களூரு!

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திங்களன்று வெளியிட்ட அறிக்கையில், "மகாராஷ்டிராவின் நாந்தேட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் 12 குழந்தைகள் உட்பட 24 நோயாளிகள் இறந்த செய்தி மிகவும் வேதனையானது, மற்றும் கவலை அளிக்கிறது. மருந்துகள் மற்றும் சிகிச்சை இல்லாததால், ஆகஸ்ட் 2023 இல் தானேயில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் இதேபோன்ற சம்பவம் நடந்தது, இதில் 18 நோயாளிகள் உயிரிழந்தனர்" என்று கூறியுள்ளார். 

மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் டாக்டர் திலிப் மயிசேகர் வெளியிட்ட அறிக்கையில், இறப்புகள் குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார். மகாராஷ்டிரா மருத்துவக் கல்வி அமைச்சர் ஹசன் முஷ்ரிப் செவ்வாய்க்கிழமை மருத்துவமனைக்கு வருகை தருகிறார் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

கேசிஆர் தன்னை சந்தித்து என்டிஏ கூட்டணியில் சேர சொன்னார்.. பிரதமர் மோடி கிளப்பிய புது சர்ச்சை !!

click me!