கவர்ச்சிகர வண்ணத்தில் ரெயில்வே ஊழியர்களுக்கு ‘ புதிய சீருடைகள்’….‘புளுரோசென்ட் ஜாக்கெட்’, ’டி.சர்ட்’ போட்டு அசத்தப் போகிறார்கள்

 
Published : Jul 02, 2017, 08:02 PM ISTUpdated : Sep 19, 2018, 12:50 AM IST
கவர்ச்சிகர வண்ணத்தில் ரெயில்வே ஊழியர்களுக்கு ‘ புதிய சீருடைகள்’….‘புளுரோசென்ட் ஜாக்கெட்’, ’டி.சர்ட்’ போட்டு அசத்தப் போகிறார்கள்

சுருக்கம்

new uniform for railway employees

வாடிக்கையாளர்களையும், பயணிகளையும் சந்திக்கும் போது, அவர்களை கர்ந்துஈர்க்கும் வகையில்  ரெயில்வே ஊழியர்களுக்கு கவர்ச்சிகரமான வண்ணத்தில் சீருடைகள் வழங்கப்பட உள்ளன.

‘பேஷன் டிசைனர்’ ரித்தூ பெரி வடிவமைப்பில், கருப்பு மற்றும் மஞ்சள் வண்ண டி-சர்ட்கள், ‘புளுரோசென்ட்’ ஜாக்கெட்கள் வழங்கப்பட உள்ளன.

பழைய ‘டிசைன்’

தற்போது, ரெயில்வேயில் டிக்கெட் பரிசோதகர்கள், ரெயில் நிலைய அதிகாரி, பாதுகாவலர்கள் உள்ளிட்டோர் அணியும் சீருடைகள் பல ஆண்டுகளுக்கு முன் வடிவமைக்கப்பட்டவை. இதனால், சீருடையில் மாற்றம் கொண்டுவந்து, புத்துணர்ச்சி ஊட்ட ரெயில்வே முடிவு செய்தது.

ரெயில்வேயில் சமையல் அறையில் பணிபுரியும் ஊழியர்கள், ரெயில் நிலைய அதிகாரி, பாதுகாவலர்கள், டிக்கெட் பரிசோதகர்கள், ரெயில் பைலட்கள் என 5 லட்சம் சீருடை ஊழியர்கள் உள்ளனர். இவர்களுக்காக புதிய வண்ணத்தில் சீருடைகள் தயாராகி வருகின்றன.

டி-சர்ட்கள்

ரெயில்வே சின்னம் பொறிக்கப்பட்டு, கருப்பு மற்றும் மஞ்சள் வண்ணம் கலந்த, அரைக் கை மற்றும் முழுக் கை டி-சர்ட்கள் ஆகியவை வரவேற்பு அறையிலும், அலுவலகத்திலும் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

கறுப்பு,மஞ்சள் வண்ணம்

வௌ்ளை மற்றும் கருப்பு ‘பார்டர்’ வைத்த டி-சர்ட் சீருடைகள், ரெயிலில் சமையல் அறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ளன.

ரெயில் பைலட், டி.டி.இ.

மஞ்சள் மற்றும் பச்சை வண்ணத்தில் ‘புளுரோசென்ட்’ ஜாக்கெட்கள், ரெயிலில்டிக்கெட் பரிசோதகர், பாதுகாவலர், மற்றும் ரெயில் பைலட்களுக்கு வழங்கப்பட உள்ளன. இந்த புதிய சீருடைகள் ரெயில்வேயில் தொழில்நுட்பம், உற்பத்திப் பிரிவில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.

காலத்துக்கு ஏற்ப மாற்றம்

இது குறித்து ரெயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ரெயில்வே துறை காலத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டு வருவதையொட்டி, ஊழியர்களின் சீருடையைும் மாற்றப்பட்டு, நிர்வாகத்துக்கு புத்துணர்ச்சி ஊட்டும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

படிப்படியாக

அடை வடிவமைப்பாளர் ரீது பெரி வடிவமைத்த ஆடைகள் அரசிடம் அனுமதிக்காக வைக்கப்பட்டுள்ளன.அரசு ஒப்புதல்  கொடுத்தவுடன் முறைப்படி அறிவிப்புவௌியாகும். தேவைப்பட்டால் சில மாற்றங்கள் செய்யப்படும். இந்த புதிய சீருடைகள் முதல்கட்டமாக ராஜ்தானி, சதாப்தி ரெயிலில் அறிமுகப்படுத்தப்பட்டு, பின், அனைத்து ரெயில்களுக்கும் விரிவு படுத்தப்படும்’’ என்று தெரிவித்தார்.

 

 

 

PREV
click me!

Recommended Stories

பாகிஸ்தானின் டுபாக்கூர்தனம்..! ஏஐ டீப்ஃபேக் வீடியோக்கள் மூலம் போலியாக போரை உருவாக்கிய கடற்படை..!
திருவனந்தபுரம் மாநகராட்சியை அடித்து தூக்குகிறது பாஜக..! விழி பிதுங்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்!