சூப்பர்....விரைவில், ‘எக்கானமி ஏ.சி. ரெயில்’…..குளிருக்கு கம்பளி தேவையில்லை, கட்டணமும் மிகக் குறைவு

 
Published : Jul 02, 2017, 07:20 PM ISTUpdated : Sep 19, 2018, 12:50 AM IST
சூப்பர்....விரைவில், ‘எக்கானமி ஏ.சி. ரெயில்’…..குளிருக்கு கம்பளி தேவையில்லை, கட்டணமும் மிகக் குறைவு

சுருக்கம்

economy ac train

சாமானிய, நடுத்தர மக்கள் அதிகமாக ஏ.சி. ரெயிலில் பயணிக்கும் வகையில், 3 அடுக்கு ஏ.சி. கட்டணத்தைக் காட்டிலும் மிகக் குறைவாக, ‘எக்கானமி ஏ.சி.ரெயில் பெட்டிகளை’ ரெயில்வே அறிமுகம் செய்ய உள்ளது.

எக்கானமி ஏ.சி. பெட்டி

முழுவதும் குளிர்சாதன வசதியுடன் இயக்கப்படும் இந்த ரெயிலில், 3 அடுக்கு படுக்கை கொண்ட ஏ.சி. பெட்டிகள், 2 அடுக்கு, முதல்வகுப்பு ‘கூபே’ என பிரிவுகள் இருக்கும், அதோடு, புதிதாக ‘எக்கானமி 3 அடுக்கு’ ரெயில் பெட்டிகளும் கூடுதலாக இணைக்கப்படும். இந்த ரெயிலில் உள்ள பெட்டிகள் அனைத்திலும் தானியங்கி கதவுகள் பொருத்தப்படும்.

‘நோ’ கம்பளி, போர்வை

இந்த ரெயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ஏ.சி. குளிரை தாங்கும் வகையில் போர்வை அல்லது கம்பளி தரப்படாது. இந்த ரெயில் பெட்டிகள் அனைத்திலும், பயணிகளுக்கு இதமாக இருக்கும் வகையில் 24 முதல் 25 டிகிரி வரை குளிர் இருக்குமாறு பொருத்தப்படும். இதனால், பயணிகள் போர்வையால் மூடித் தூங்க வேண்டிய அவசியம் இருக்காது. மேலும், கட்டணமும் 3 அடுக்கு ஏ.சி. கட்டணத்தைக் காட்டிலும் மிகக் குறைவு.

புதியஅறிமுகம்

இப்போது, மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மட்டுமே படுக்கை வசதி, 3 அடுக்கு படுக்கை ஏசி, 2 அடுக்கு படுக்கை ஏசி, முதல்வகுப்பு ஏசி பிரிவுகளும்,ராஜ்தானி, சதாப்தி, ஹம்சபர், தேஜாஸ் ஆகிய ரெயில்கள் முழுவதும் குளிர்சாதன வசதி கொண்டதாக இருக்கின்றன.

இந்நிலையில், சாமானிய, நடுத்தர மக்களின் பயன்பாட்டுக்காகவும், அதிகமான பயணிகளை ஏ.சி. பெட்டியில் பயணிக்கும் வகையிலும் குறிப்பிட்ட வழித்தடங்களில் இதமான குளிர் வழங்கும் இந்த ஏ.சி. ரெயில்அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

முழுவதும் ஏ.சி. வசதி கொண்ட இந்த ரெயிலை வடிவமைக்கும், மாற்றி அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன, இதற்கான தனியாக ரெயில்நிலையங்கள், பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

24 முதல் 25 டிகிரி

இது குறித்து ரெயில்வே துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ முழுவதும் ஏ.சி. வசதி கொண்ட இந்த சிறப்பு ரெயிலில் ஏ.சி. காற்று மிகவும் குளிராக இருக்காது. பயணிகளுக்கு இதமாக இருக்கும் வகையில் 24 முதல் 25 டிகிரி குளிர்தான் இருக்கும். இதனால், பயணிகள் போர்வை மற்றும் கம்பளி கொண்டு தூங்க வேண்டிய அவசியம் இல்லாமல், இதமான குளிரில் தூங்கலாம். இந்த ரெயிலில் அதிகமான பயணிகள் பயணக்கும் வகையில் கூடுதலாக எக்கானமி ஏ.சி. பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது ’’ என்றார்.

 

 

PREV
click me!

Recommended Stories

திருப்பதி: திருமலை போகிறீர்களா? தரிசனத்தில் திடீர் மாற்றம்! பக்தர்கள் கவனத்திற்கு!
நாடு சுக்கு சுக்காக சிதறிவிடும்..! பாஜக ஆளும் மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலால் சீமான் ஆவேசம்