புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா... எந்தெந்த கட்சிகள் பங்கேற்கின்றன? இதோ முழு விவரம்!!

By Narendran S  |  First Published May 25, 2023, 7:43 PM IST

இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தின் கட்டிடம் தயாராக உள்ளது. நாட்டின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி வரும் 28 ஆம் தேதி திறந்து வைக்கிறார். இந்த விழாவில் எந்தெந்த கட்சிகள் பங்கேற்கும் மற்றும் புறக்கணிக்கும் என்பதை இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.


இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தின் கட்டிடம் தயாராக உள்ளது. நாட்டின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி வரும் 28 ஆம் தேதி திறந்து வைக்கிறார். இந்த விழாவில் எந்தெந்த கட்சிகள் பங்கேற்கும் மற்றும் புறக்கணிக்கும் என்பதை இந்த செய்தித்தொகுப்பில் காணலாம். இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தின் கட்டிடம் தயாராக உள்ள நிலையில் இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி வரும் 28 ஆம் தேதி திறந்து வைக்கிறார்.

இதையும் படிங்க: புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா சர்ச்சை.. காங்கிரஸ் எதிர்ப்புக்கு பின்னால் உள்ள உண்மையான காரணம் என்ன?

Tap to resize

Latest Videos

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திரௌபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில் அதனை மத்திய அரசு மறுத்துவிட்டது. இதை அடுத்து இந்த நிகழ்ச்சியை எதிர்கட்சிகள் புறக்கணித்துள்ளன. எனினும், புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் இருபதுக்கும் மேற்பட்ட கட்சிகள் பங்கேற்பதாக அறிவித்துள்ளன. தொடக்க விழாவில் எந்தெந்த அணிகள் கலந்து கொள்கின்றன என்பதை தற்போது பார்க்கலாம்.

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்கும் கட்சிகள்:

தேசிய ஜனநாயகக் கூட்டணி:

பா.ஜ.க, சிவசேனா (ஷிண்டே), தேசிய மக்கள் கட்சி, மேகாலயா, தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி, சிக்கிம் புரட்சிகர முன்னணி, ஜனநாயக கட்சி, அ.தி.மு.க, ஐ.எம்.கே.எம்.கே, AJSU, RPi, மிசோ தேசிய முன்னணி, தமிழ் மாநில காங்கிரஸ், ITFT (திரிபுரா), போடோ மக்கள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி, அப்னா தளம், அசாம் கண பரிஷத்

இதையும் படிங்க: பிரதமர் மோடி வரலாற்று பிழையை திருத்துகிறார்; செங்கோல் குறித்து டுவிட்டரில் பெருகும் ஆதரவு!!

தேசிய ஜனநாயகக் கூட்டணி அல்லாத கட்சி: 

லோக் ஜனசக்தி கட்சி (பாஸ்வான்), பிஜேடி, பி.எஸ்.பி, டிடிபி, ஒய்.எஸ்.ஆர்.சி.பி, அகாலி தளம்,  ஜேடிஎஸ்
என மொத்தம் 25 கட்சிகள் இந்த விழாவில் பங்கேற்கின்றன. 

click me!