இந்தியாவுக்கு பேராபத்து? புதிய டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு.. மீண்டும் உருமாறி மிரட்டல்..!

By vinoth kumar  |  First Published Jun 15, 2021, 5:41 PM IST

புதிய உருமாற்றம், சார்ஸ்-கொரோனா வைரஸ் 2-ன் கூர்முனை புரதத்தில் ஏற்பட்டுள்ளதாகவும், அது மனித செல்களில் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் டெல்லியில் உள்ள மரபியல் மற்றும் ஒருங்கிணை உயிரியல் நிறுவன விஞ்ஞானி வினோத் ஸ்காரியா கூறுகிறார். தற்போது புதிதாக மாற்றம் அடைந்துள்ள டெல்டா பிளஸ் வகை குறித்து அதிகம் கவலைப்பட தேவையில்லை. 


மனிதகுலத்தை மிரட்டிவரும் கொரோனா வைரஸ், புதிது புதிதாகவும் உருவெடுத்து குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அந்த வரிசையில், அதிகமாக பரவும் தன்மையுள்ள டெல்டா வகை சார்ந்த சார்ஸ்-கொரோனா வைரஸ் 2 மேலும் உருமாறி, டெல்டா பிளஸ் ஆக மாறியுள்ளதாகஅதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

கொரோனா முதல் அலையை விட 2வது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பின்னர், இந்த வைரஸ் பல விதமாக உருமாற்றம் அடைந்து சில நாடுகளில் 2வது, 3வது அலைகளாக உருவெடுத்தது. இந்தியாவிலும், டெல்டா வகை சார்ந்த சார்ஸ்-கொரோனா வைரஸ் 2வது அலையாக உருவெடுத்து, அதிவேகமாக பரவியது. இதனால், பாதிப்பு எண்ணிக்கையும், உயிரிழப்பும் அதிகரித்தது. தற்போது ஓரளவு பாதிப்புகள் குறைந்துவரும் சூழலில், டெல்டா வகை வைரஸ், மேலும் உருமாறி ‛டெல்டா பிளஸ்' ஆக தோன்றியுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

undefined

இந்த புதிய உருமாற்றம், சார்ஸ்-கொரோனா வைரஸ் 2-ன் கூர்முனை புரதத்தில் ஏற்பட்டுள்ளதாகவும், அது மனித செல்களில் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் டெல்லியில் உள்ள மரபியல் மற்றும் ஒருங்கிணை உயிரியல் நிறுவன விஞ்ஞானி வினோத் ஸ்காரியா கூறுகிறார். தற்போது புதிதாக மாற்றம் அடைந்துள்ள டெல்டா பிளஸ் வகை குறித்து அதிகம் கவலைப்பட தேவையில்லை. ஆனால் இந்த வைரஸை தொடந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். 

இதுகுறித்து மேலும், அவர்கள் கூறுகையில்;- உருமாறிய டெல்டா  வைரஸ் தற்போது டெல்டா பிளஸ் அல்லது ஏஒய்1 என்ற மாற்றம் அடைந்துள்ளது. உருமாறிய டெல்டா பிளஸ் வைரசானது மோனோக்ளோனல் ஆன்டிபாடி காக்டெய்ல் சிகிச்சைக்கு  எதிரான அறிகுறிகளை காட்டுகிறது. இந்த வரிசை மரபணுக்கள் 10 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளன. இங்கிலாந்து பொது சுகாதார அமைப்பு  வெளியிட்ட சுகாதார அறிக்கையில்  ஜூன் 7ம் தேதி நிலவரப்படி  இந்தியாவில் 6 பேருக்கு டெல்டா  பிளஸ் வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது என்றனர். 

click me!