புதுப்பிக்கப்பட்டு 'பாரத் மண்டபம்' என்று பெயர் மாற்றப்பட்ட ஐஇசிசி வளாகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து பேசிய பிரதமர் மோடி, இது நாட்டுக்கு அளிக்கப்பட்டிருக்கும் பரிசு என்று கூறினார்.
டெல்லியில் சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாடுகள் நடத்துவதற்கான ஐஇசிசி வளாகத்தை பிரதமர் மோடி புதன்கிழமை திறந்தவைத்தார். இந்த விழாவில் ஐஇசிசி வளாகத்திற்கு 'பாரத் மண்டபம்' என்ற புதிய பெயரும் சூட்டப்பட்டுள்ளது.
இந்த வளாகத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவில் பேசிய பிரதமர் மோடி, பாரத் மண்டபத்தை பார்த்த பிறகு ஒவ்வொரு இந்தியனும் மகிழ்ச்சியும், பெருமையும் அடைவார். 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்தியாவுக்கு கிடைத்த பரிசு இந்த பாரத மண்டபம் என்று குறிப்பிட்டார்.
வீடியோ: டெல்லியில் பிரம்மாண்டமான பாரத் மண்டபம்! பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
"இந்தியா ஜனநாயகத்தின் தாய் என்பதை உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது. டெல்லியில் புதிதாக கட்டப்பட்ட பாரத் மண்டபம் ஜி20 மாநாட்டை நடத்தும் போது, இந்தியாவின் உயரத்தை உலகம் காணும். பாரத் மண்டபம் மாநாட்டு சுற்றுலாவையும் மேம்படுத்தும்" என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்த பிரதமர், "எனது மூன்றாவது பதவிக்காலத்தில், இந்தியா உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கும்... இது மோடி அளிக்கும் உத்தரவாதம்." என்று கூறினார்.
எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை முடக்க முயல்வதாக பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக சாடியுள்ளார். "கடந்த 5 ஆண்டுகளில் 13.5 கோடி பேர் வறுமையில் இருந்து வெளியே வந்துள்ளனர். சர்வதேச ஏஜென்சிகளும் இந்தியாவில் தீவிர வறுமை முடிவுக்கு வரும் என்று கூறுகின்றன. கடந்த 9 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் கொள்கைகள், நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதையே இது காட்டுகிறது" என்றும் சுட்டிக்காட்டினார்.
எந்தக் கொம்பனாலும் குறை சொல்ல முடியாது!: திருச்சி கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசப் பேச்சு