
தலைநகரில் கற்று மாசடைந்து வரும் இந்த நேரத்தில் அண்டை மாநிலமான குருகிராமும் மாசுபாட்டை எதிர்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், "அதிகரிக்கும் மாசு அளவைக் கருத்தில் கொண்டு, டெல்லியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் தொடக்கப் பள்ளிகள் அடுத்த 2 நாட்களுக்கு மூடப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
கௌதம் புத் நகர், காசியாபாத், ஃபரிதாபாத் மற்றும் குருகிராம் உள்ளிட்ட தேசிய தலைநகர் பிராந்தியத்தில் அத்தியாவசியமற்ற கட்டுமான நடவடிக்கைகளை மத்திய மாசுக் கட்டுப்பாட்டுக் குழு தடை செய்துள்ளது. நகருக்குள் டீசல் லாரிகள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. தலைநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் மாசுபாட்டைச் சமாளிக்க வடிவமைக்கப்பட்ட தரப்படுத்தப்பட்ட செயல் மறுமொழித் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் ஒரு பகுதியாக வேறு பல நடவடிக்கைகள் நடைமுறைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கேவலமான கேள்விகளை கேட்கிறார்கள்: கோபமாக வெளிநடப்பு செய்த மஹுவா மொய்த்ரா!
குருகிராம் மாவட்ட மாஜிஸ்திரேட், குப்பை, இலைகள், பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் போன்ற கழிவுப் பொருட்களை எரிக்க தடை விதித்துள்ளார். மேலும் அதை எரிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் எண்டுறம் அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய், தரப்படுத்தப்பட்ட பதில் செயல்திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்க வெள்ளிக்கிழமை ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
"GRAPன் மூன்றாம் கட்டத்தை திறம்பட செயல்படுத்துவது குறித்து விவாதிக்க அனைத்து துறைகளின் கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கு அழைக்கப்பட்டுள்ளது" என்று அவர் ஊடகங்களிடம் கூறினார். டெல்லியின் மாசு அளவு இந்த ஆண்டு முதல் முறையாக இன்று "கடுமையான" குறியை எட்டியது, மாலை 5 மணிக்கு அதன் அளவு 402 ஆக இருந்தது.
அடுத்த இரண்டு வாரங்களில் மேலும் இந்த நிலையில் அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். AQI அதாவது Air Quality Index என்று அழைக்கப்படும் இந்த அளவு என்பது 0 முதல் 100குள் இருந்தால் சரியான அளவில் உள்ளது என்று அர்த்தம், அதேபோல 100 முதல் 200குள் இருந்தால் காற்றின் அளவில் மிதமான அபாயத்தில் உள்ளது என்று அர்த்தம்.
200 முதல் 300 வரை இருந்தால் சற்று அதிக அபாயம் என்று கூறப்படுகிறது, மேலும் 300 முதல் 400 வரை இருந்தால் அதிக அபாயம் என்றும், 400 முதல் 500 வரை இருந்தால் உச்சகட்ட அபாயத்தில் காற்றின் தரம் உள்ளது என்றும் அர்த்தம். டெல்லியை பொறுத்தவரை 18 இடங்களில் சுமார் 400 முதல் 452 வரை உச்சகட்ட கற்று மாசு உள்ளது குறிப்பிடத்தக்கது.
துபாயில் 3 நாள் நடக்கும் இந்தியா குளோபல் மாநாடு: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்கிறார்
இதுஒருபுரம் இருக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை, பஞ்சாபில் பண்ணை தீ விபத்துகள் சுமார் 740 சதவீதம் அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும், 1,068 தீ விபத்துகள் பதிவாகியுள்ளன, நடப்பு அறுவடை பருவத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளது செயற்கைக்கோள் படங்களில் கூட சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D