
ஆந்திராவில், 25 வயது பெண் ஒருவருக்கு 4 கால்களுடன் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதை அறிந்த அப்பகுதி மக்கள், குழந்தையைக் காண ஆவலுடன் சென்று வருகின்றனர்.
ஆந்திர மாநிலம், காக்கிநாடா அருகே ராஜமகேந்திரவரம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் கடந்த சில நாட்களுக்கு முன் மணி என்ற 25 வயது பெண் அனுமதிக்கப்பட்டார்.
நிறைமாத கர்ப்பிணியான மணிக்கு நேற்று பிரசவ வலி எடுத்ததை அடுத்து, அவருக்கு, மருத்துவர்கள் மருத்துவம் பார்த்தனர். பிரசவத்தில் மணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் பிறந்த குழந்தைக்கு 4 கால்கள் இருப்பதைக் கண்ட மருத்துவர்கள், மற்றும் மணியின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
4 கால்களுடன் பிறந்த குழந்தை குறித்து மருத்துவர்கள் தெரவித்தபோது, இது மிகவும் அரிதான ஒன்று என்று அவர்கள் கூறினர். தாயும், குழந்தையும் ஆரோக்கியமாக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
4 கால்களுடன் பிறந்த குழந்தை குறித்து அறிந்த அப்பகுதி மக்கள், அந்த குழந்தையைக் காண மருத்துவமனைக்கு ஏராளமானோர் சென்று பார்த்து வருகின்றனர்.