வெளியானது சாக்லெட் பிரவுன் நிறத்தில் புதிய பத்து ரூபாய்! விரைவில் புழக்கத்திற்கு வருகிறது!

 
Published : Jan 05, 2018, 04:35 PM ISTUpdated : Sep 19, 2018, 01:47 AM IST
வெளியானது சாக்லெட் பிரவுன் நிறத்தில் புதிய பத்து ரூபாய்! விரைவில் புழக்கத்திற்கு வருகிறது!

சுருக்கம்

New 10 rupees in chocolate brown color!

புதிய பத்து ரூபாய் நோட்டுகள் சாக்லேட் பழுப்பு வண்ணத்தில் இன்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

புதிய பத்து ரூபாய் நோட்டுகளில் கொனர்க் சூரியனார் கோயிலின் படம் இடம் பெற்றிருக்கும் என்றும் கூறப்படுகிறது. கடந்த வாரம் மத்திய அரசின் ஒப்புதல் பெற்ற பின், ரிசர்வ் வங்கி இதுவரை சுமார் ஒரு பில்லியன் புதிய பத்து ரூபாய் நோட்டுகளை அச்சிட்டுள்ளதாக நேற்று தகவல் வெளியாகியது. இதற்கு முன்னதாக கடந்த 10 ஆண்டுகளில் பத்து ரூபாய் நோட்டு 2005 ஆம் ஆண்டு சீரமைக்கப்பட்டது. 

2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆயிரம் ரூபாய் மற்றும் ஐநூறு ரூபாய் செல்லாததாக அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர் மத்திய அரசு ரூ.2000 மற்றும் ரூ.500 நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. சென்ற வருடம் 2017 ஆகஸ்ட் மாதத்தில் 200 ரூபாய் மற்றும் 50 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது.

ஏற்கனவே புழக்கத்தில் இருந்த 10 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய வண்ணத்தில் பத்து ரூபாய் நோட்டுகளை வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டிருந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன. 

இந்த நிலையில், இன்று புதிய பத்து ரூபாய் நோட்டுகள், ரிசர்வ் வங்கியால் இன்று வெளியிடப்பட்டுள்ளது. புதிய பத்து ரூபாய் நோட்டில் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் கையெழுத்து இடம் பெற்றுள்ளது. 

சாக்லெட் பிரவுன் வண்ணத்தில் அச்சிடப்பட்டுள்ள புதிய பத்து ரூபாய் நோட்டுகள் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

PREV
click me!

Recommended Stories

வீர் சாவர்க்கர் பெயரில் சர்வதேச விருது.. ஏற்க மறுத்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்!
பிரதமர் மோடி இதயங்களை ஹேக் செய்பவர்! மக்களவையில் தாறுமாறாக புகழ்ந்த கங்கனா ரணாவத்!