நெல்லித்தோப்பு தேர்தல் தேதியும் அறிவிப்பு... களமிறங்குகிறார் புதுவை முதல்வர் நாராயணசாமி

 
Published : Oct 18, 2016, 05:51 AM ISTUpdated : Sep 19, 2018, 02:08 AM IST
நெல்லித்தோப்பு தேர்தல் தேதியும் அறிவிப்பு... களமிறங்குகிறார் புதுவை முதல்வர் நாராயணசாமி

சுருக்கம்

புதுச்சேரியில் உள்ள நெல்லிகுப்பம் தொகுதியில் நவம்பர் 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

புதுச்சேரியில், காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. புதுவையின் முதலமைச்சராக நாராயணசாமி உள்ளார். இவர் போட்டிட ஏதுவாக நெல்லிதோப்பு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற ஜான்குமார் ராஜினாமா செய்திருந்தார். இதனை அடுத்த, முதலமைச்சர் நாராயணசாமி, நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ளார்.

தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதைப் போலவே அடுத்த மாதம் 19 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. வேட்புமனு தாக்கல் இம்மாதம 26 ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 2 ஆம் தேதி முடிவடையும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 

நவம்பர் 5 ஆம் தேதி வேட்புமனு வாபஸ் வாங்க கடைசி நாள் என்றும், நவ. 19 ஆம் தேதி தேர்தலுக்குப் பிறகு 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
"இந்தி படி.. இல்லன்னா டெல்லியை விட்டுப் போ!" பயிற்சியாளரை மிரட்டிய பாஜக பெண் கவுன்சிலர்!