பாகிஸ்தானுக்‍கு உதவ தயார் : ராஜ்நாத் சிங் புது குண்டு...!!!

 
Published : Oct 18, 2016, 05:44 AM ISTUpdated : Sep 19, 2018, 02:08 AM IST
பாகிஸ்தானுக்‍கு உதவ தயார் : ராஜ்நாத் சிங் புது குண்டு...!!!

சுருக்கம்

தீவிரவாதத்தை அடியோடு ஒழிக்‍க பாகிஸ்தான் உண்மையிலேயே விரும்பினால், அந்நாட்டுக்‍கு உதவிட இந்தியா தயாராக இருப்பதாகவும், ஆனால், பாகிஸ்தானுக்‍கு அந்த எண்ணம் துளியும் இல்லை என்றும் மத்திய உள்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். 

சண்டிகரில் இன்று நடைபெற்ற பத்திரிகை ஆசிரியர்கள் மாநாட்டில், திரு.ராஜ்நாத்சிங் உரையாற்றினார். சைபர் குற்றங்கள், பெரும் சவாலாக உருவெடுத்து வருவதாகவும், அவற்றை ஒடுக்‍க மத்திய அரசு தேவையான நடவடிக்‍கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்த திரு.ராஜ்நாத்சிங், தேசிய பாதுகாப்பு கவுன்சில் இப்பிரச்சினையை தீவிரமாக கையாண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

தீவிரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்‍க வேண்டும் என்ற எண்ணம் பாகிஸ்தானுக்‍கு சிறிதும் இல்லை என சுட்டிக்‍காட்டிய அமைச்சர், உண்மையிலேயே பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஒழிக்‍க விரும்பினால் அந்நாட்டுக்‍கு தேவையான உதவிகளை இந்தியா வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
"இந்தி படி.. இல்லன்னா டெல்லியை விட்டுப் போ!" பயிற்சியாளரை மிரட்டிய பாஜக பெண் கவுன்சிலர்!