பிரபல சமூக ஆர்வலர் Bhupendra Vira சுட்டு கொலை!

 
Published : Oct 18, 2016, 05:11 AM ISTUpdated : Sep 19, 2018, 02:08 AM IST
பிரபல சமூக ஆர்வலர் Bhupendra Vira சுட்டு கொலை!

சுருக்கம்

மும்பையைச் சேர்ந்த பிரபல சமூக சேவகரும், நில ஆக்‍கிரமிப்புகளை எதிர்த்து போராடியருவமான Bhupendra Vira என்பவர் மர்ம நபர்களால் துப்பாக்‍கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை பகுதியில் வசித்து வந்த Bhupendra Vira, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் அங்குள்ள மக்‍களுக்‍காக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர்.

மும்பை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெறும் நில ஆக்‍கிரமிப்புகளுக்‍கு எதிராக குரல் கொடுத்து வந்தார். ஆம் ஆத்மி கட்சி மற்றும் பிற அமைப்புகளிலும் பங்கேற்று ஏராளமான இயக்‍கங்களை நடத்தி வந்தததால், அவருக்‍கும், நில ஆக்‍கிரமிப்பாளர்களுக்‍கும் இடையே பகைமை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மும்பையில் இன்று அவரை மர்ம நபர்கள் சிலர் துப்பாக்‍கியால் சுட்டு கொலை செய்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைக்‍கு நில ஆக்‍கிரமிப்பாளர்களே காரணம் என குற்றம் சாட்டியுள்ள Bhupendra Vira-வின் ஆதரவாளர்கள், குற்றவாளியை விரைந்து கண்டுபிடிக்‍க நடவடிக்‍கை எடுக்‍குமாறு வலியுறுத்தி உள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

மாற்றப்படும் நிதின் கட்கரி? மத்திய அமைச்சரவையில் மாற்றமா? உண்மை நிலவரம் என்ன?
ரூமில் கள்ளக்காதலனுடன் மனைவி.. பார்க்க கூடாததை பார்த்த கணவர்.. குழந்தை வாக்குமூலத்தில் வெளிவந்த பகீர் உண்மை!