PM Modi Slams Congress : மக்களவையில் இன்று பேசிய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், நேருவின் சொற்பொழிவை மேற்கோள்கட்டி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
மக்களவையில் காங்கிரஸை கடுமையாக தாக்கி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஜவஹர்லால் நேரு அவர்கள் அமெரிக்க மற்றும் சீன மக்களோடு ஒப்பிடும்போது இந்தியர்கள் சோம்பேறிகள் மற்றும் குறைந்த புத்திசாலித்தனம் கொண்டவர்கள் என்று அவர் நினைத்ததாக கடும் கட்டமாக பேசியுள்ளார் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.
இன்று பிப்ரவரி 5ம் தேதி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பதிலளித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், இந்தியர்கள் சிரமங்களிலிருந்து தப்பி ஓடுகிறார்கள் என்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பேசியதை மேற்கோள்காடியும் காங்கிரஸ் கட்சியினரை கடுமையாகத் தாக்கினார்.
எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் என்று சபதம் எடுத்து இருக்கிறீர்களா.? காங்கிரசை கலாய்த்த பிரதமர் மோடி
அதை தொடர்ந்து பேசிய நரேந்திர மோடி, செங்கோட்டையில் இருந்து பிரதமர் நேரு பேசியதை இப்பொது படிக்கிறேன். "பொதுவாக இந்தியர்களுக்கு கடினமாக உழைக்கும் பழக்கம் இல்லை, ஐரோப்பா, ஜப்பான், சீனா, ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ளவர்கள் போல உழைக்கவில்லை” என்று நேரு பேசியதை பிரதமர் மோடி நினைவுகூர்ந்தார்.
இதற்கு "இந்தியர்கள் சோம்பேறிகள் மற்றும் குறைந்த புத்திசாலிகள் என்று நேரு ஜி நினைத்தார் என்று அர்த்தம்" என்று காங்கிரஸ் எம்.பி.க்களின் முழக்கங்களுக்கு மத்தியில் அவர் மேலும் கூறினார். இந்திரா காந்தியின் சிந்தனையும் நேருவின் சிந்தனையிலிருந்து வேறுபட்டதல்ல என்று கூறிய பிரதமர் மோடி, சுதந்திர தினத்தன்று செங்கோட்டையின் அரண்மனைகளில் இருந்து முன்னாள் பிரதமர் பேசியதை மேற்கோள் காட்டினார்.
துரதிர்ஷ்டவசமாக, சில சுப காரியங்கள் முடிவடையும் போது, நாம் மனநிறைவு அடைகிறோம், எந்த சிரமம் வந்தாலும், நம்பிக்கையற்றவர்களாக மாறுகிறோம், சில சமயங்களில் ஒட்டுமொத்த தேசமும் தோல்வியடைந்ததாகத் தெரிகிறது. தோல்வி உணர்வை ஏற்றுக்கொண்டது போல் தெரிகிறது. ," என்று இந்திரா காந்தி கூறியதாக பிரதமர் மோடி கூறினார்.
"இன்று காங்கிரஸில் உள்ள மக்களைப் பார்க்கும்போது, இந்திரா காந்தியால் நாட்டு மக்களை சரியாக மதிப்பிட முடியவில்லை, ஆனால் காங்கிரஸை முற்றிலும் சரியாக மதிப்பிட்டார் என்று தெரிகிறது" என்று பிரதமர் மோடி மேலும் கூறினார். காங்கிரஸின் மனநிலை, நாட்டின் திறனை ஒருபோதும் நம்பாதது என்று பிரதமர் கூறினார். "அது தன்னை ஆட்சியாளர்களாகவும், பொதுமக்களை யாரோ சிறியவராகவும் கருதியது" என்று பிரதமர் கூறினார்.