இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவு இன்று வெளியாகிறது. இந்தாண்டு நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த ஜூலை 17 ஆம் தேதி 497 நகரங்களில் 3,570 தேர்வு மையங்களில் நடந்தது
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவு இன்று வெளியாகிறது. நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு தேசிய தகுதி நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த தேர்வானது தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படுகிறது.
அதன்படி இந்தாண்டு நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த ஜூலை 17 ஆம் தேதி 497 நகரங்களில் 3,570 தேர்வு மையங்களில் நடந்தது. இந்த தேர்வை 17.78 லட்சம் மாணவர்கள் எழுதினர். தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுதினர்.
மேலும் படிக்க:அரசு பேருந்துகளில் கட்டண சலுகை.. வெளியான அதிரடி அறிவிப்பு - பொதுமக்கள் மகிழ்ச்சி!
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி விடைகுறிப்பு மற்றும் ஒஎம்ஆர் விடைத்தாள் நகல்கள் வெளியிடப்பட்டன. நாடுமுழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவு இன்று வெளியாகிறது.
எனவே மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை அதிகாரப்பூர்வ இணையதளமான https://neet.nta.nic.in/ மூலம் தெரிந்துக் கொள்ளலாம். நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிற நிலையில், தமிழகத்தில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு செப்.,10 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.
மேலும் படிக்க:தேர்வர்களே அலர்ட்.. தமிழக அரசின் 155 விரிவுரையாளர் காலி பணியிடங்கள்.. TRB வெளியிட்ட அறிவிப்பு..