முதுநிலை நீட் தேர்வு திடீர் ரத்து! மாற்று தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனத் தகவல்

By SG BalanFirst Published Jun 22, 2024, 10:49 PM IST
Highlights

நாளை நடைபெற இருந்த முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

நாளை நடைபெற இருந்த முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஜூன் 23ஆம் தேதி நடைபெறவிருந்த முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. தேர்வுக்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Latest Videos

மருத்துவ மாணவர்களுக்கான தேசிய தேர்வு வாரியத்தால் நீட்-பிஜி தேர்வு நடத்தப்படுகிறது. NEET UG, UCG-NET மற்றும் கூட்டு CSIR-UGC-NET தேர்வுகளை ரத்து செய்தல் தொடர்பான சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில் NEET PG தேர்வும் ரத்தாகி இருக்கிறது.

ரயில்வேயில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் உள்ளிட்ட சேவைகளுக்கு வரிவிலக்கு: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு

“சமீபத்தில் சில போட்டித் தேர்வுகள் தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகளை கருத்தில் கொண்டு, நீட்-பிஜி நுழைவுத் தேர்வு செயல்முறையை முழுமையாக மதிப்பீடு செய்ய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி நாளை, அதாவது ஜூன் 23, 2024 அன்று நடைபெறவிருந்த நீட்-பிஜி நுழைவுத் தேர்வை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாணவர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு சுகாதார அமைச்சு மனப்பூர்வமாக வருந்துவதாக தெரிவித்துள்ள சுகாதா அமைச்சகம் “மாணவர்களின் நலன்களுக்காகவும், பரீட்சை செயல்முறையின் புனிதத்தன்மையை பேணுவதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றும் விளக்கியுள்ளது.

என்.டி.ஏ. இயக்குநர் பணிநீக்கம்:

நீட் மற்றும் நெட் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், தேசிய தேர்வு முகமை (என்டிஏ) இயக்குநர் ஜெனரல் சுபோத் சிங்கும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மறு உத்தரவு வரும்வரை அவர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்திய வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பின் (ITPO) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான பிரதீப் சிங் கரோலா என்.டி.ஏ. இயக்குநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

நீட் சர்ச்சை எதிரொலி: தேசிய தேர்வு முகமையை ஒழுங்குபடுத்த வல்லுநர் குழு அமைத்தது மத்திய அரசு!

click me!