NEET Exam : மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நீட் தேர்வில் எந்த விதமான குளறுபடிகளும் நடைபெறவில்லை என்று அறிவித்துள்ளார்.
2024 மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வில், ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டிருக்கின்றன. நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்பட்டதை அடுத்து, இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு வந்தது. நீட் தேர்வில் முறைகேடு, தாள் கசிவு மற்றும் ஊழல் நடந்துள்ளது என்றும், அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
மறுபுறம், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நீட் தேர்வில் எந்தவிதமான மோசடிகளும் நடக்கவில்லை என்றும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள் மற்றும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி அடுத்த செயல்முறை தொடங்கப்படும் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
மத்திய கல்வி அமைச்சர் சொன்னதென்ன?
நீட் தேர்வு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றி உரிய நடவடிக்கை எடுக்க என்டிஏ உறுதிபூண்டுள்ளதாக கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, 1563 மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்றார். எந்தவிதமான முறைகேடுகளும் இல்லை என மறுத்த அவர், நீட் தேர்வில் இதுவரை எந்தவிதமான முறைகேடு, ஊழல், தாள் கசிவு போன்ற என்று கூறப்படும் எவற்றுக்கும் உறுதியான ஆதாரங்கள் வெளிவரவில்லை என்றார்.
இது தொடர்பான அனைத்து உண்மைகளும் உச்ச நீதிமன்றத்தில் உள்ளது மற்றும் பரிசீலனையில் உள்ளது என்றும் அவர் கூறினார். தாள் கசிவைத் தடுக்கவும், முறைகேடு இல்லாத தேர்வை நடத்தவும், பல கடுமையான விதிகளைக் கொண்ட பொதுத் தேர்வு சட்டத்தை இந்த ஆண்டு மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது என்பதை காங்கிரசுக்கு நினைவூட்ட விரும்புகிறேன் என்றார் அவர்.
காங்கிரஸ் இதில் அரசியல் விளையாட்டை விளையாடுவதாக குற்றம்சாட்டிய அவர், காங்கிரஸ் அரசியல் லாபம் ஈட்டாமல், இந்தியாவின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் பங்களிக்க வேண்டும் என்றார். இந்த விவகாரத்தில் அரசியல் செய்வது குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியாகவே உள்ளதுடன், மாணவர்களின் மன அமைதியையும் பாதிக்கிறது என்றும் அவர் கூறினார்.
NEET परीक्षा मामले में NTA माननीय सुप्रीम कोर्ट के निर्देशों का पालन करते हुए उचित कार्यवाही करने को कटिबद्ध है। माननीय सुप्रीम कोर्ट के निर्देशानुसार 1563 विद्यार्थियों की परीक्षा दोबारा करायी जायेगी।
NEET परीक्षा में किसी प्रकार की धांधली, भ्रष्टाचार या पेपर लीक की कोई भी… https://t.co/SHh0kfRJoD
தற்போது நீட் கவுன்சிலிங் தொடங்க உள்ள நிலையில், அதை அரசியல் வேட்டையாடுவது அநியாயம் மட்டுமல்ல, வருங்கால சந்ததியினருடன் விளையாடுவது போன்றது என்றும், மாணவர்களின் ஒளிமயமான எதிர்காலத்தை உறுதி செய்வதில் மத்திய அரசின் கவனம் எப்போதும் உள்ளது என்றும் அவர் கூறினார். இதுபோன்ற உணர்ச்சிகரமான விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் உண்மை தெரியாமல் பொய்களைப் பரப்பி வருவதாகவும் பிரதான் கூறினார். காங்கிரசு தனது அற்ப அரசியலுக்காக நாட்டின் எதிர்காலத்துடன் விளையாடுகிறது என்றும் சாடினார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மீண்டும் நியமனம்!