நீட் தேர்வு : பெங்களூருவில் பிரதமர் மோடியின் 2 நாள் ரோட்ஷோவில் மாற்றம்.. பாஜக அறிவிப்பு..

By Ramya s  |  First Published May 5, 2023, 5:55 PM IST

நீட் தேர்வை கருத்தில் கொண்டு, கர்நாடகா பாஜக, பெங்களூருவில் பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டு நாள் தேர்தல் பரப்புரையில் மாற்றங்களைச் செய்துள்ளது.


மருத்துவ படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (நீட்) மே 7-ம் தேதி நடைபெற உள்ளது. கர்நாடகாவில் தேர்தல் வரும் 10-ம் தேதி நடைபெற உள்ள நிலையில்  அங்கு தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ளது. பிரதமர் மோடி, அமித்ஷா, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, கார்கே உள்ளிட்டோர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி வரும் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவார் என்று அறிவிக்கப்பட்டது. 

நீட் தேர்வை மனதில் வைத்து, கர்நாடகா பாஜக, பெங்களூருவில் பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டு நாள் தேர்தல் பரப்புரையில் மாற்றங்களைச் செய்துள்ளது. மே 7-ம் தேதி மதியம் 2 மணிக்கு 26 கிமீ நடக்கும் சாலை பேரணி தேர்வெழுதும் மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Latest Videos

இதையும் படிங்க : ஜம்முவில் என்கவுண்ட்டர்.. 2 ராணுவ வீரர்கள் வீரமரணம்.. இண்டர்நெட் சேவை துண்டிப்பு..

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே “ நீட் தேர்வு இது பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், 'ழந்தைகள் மீது சிறப்பு கவனம் செலுத்தும் மோடி, ஒருவருக்கு கூட சிரமம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். எக்காரணம் கொண்டு தேர்வு மையத்திற்கு செல்லும் மாணவர் பாதிக்கப்படாது என்று மோடி கூறினார். 

எனவே திட்டத்தில் மாற்றங்களைச் செய்யுமாறு மாநில பாஜகவுக்கு பிரதமர் உத்தரவிட்டார், அவர் விரும்பியபடி, திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக மே 6-ம் தேதி 10 கி.மீ ரோடு ஷோ நடத்தப்படும் என்றும், மே 7-ம் தேதி 26 கி.மீட்டர் தூரம் வரை நடைபெறும் என்றும் கூறியிருந்தோம். அதை மாற்றி, ப 6-ம் தேதி 26 கி.மீ. சாலை பேரணியும்,  சுமார் 10 கிமீ தூரத்தில் குறுகிய ஒரு பகுதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 11:30 மணி வரை குறுகிய பேரணியும் விரைவில் முடிக்கப்படும். , என்றாள்.

மேலும், ஞாயிற்றுக்கிழமை ரோட்ஷோ நடைபெறும் பகுதியில் அதிக தேர்வு மையங்கள் இல்லை. அந்தப் பகுதியில் இருந்து வரும் மாணவர்கள் யாராவது இருந்தால், அவர்களின் ஹால் டிக்கெட்டைக் காட்டி, அவர்கள் தேர்வுக்கு வருவதை உறுதி செய்ய காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது..” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் "நோயாளிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ்கள் எந்த இடையூறும் இல்லாமல் சரியான நேரத்தில் மருத்துவமனைகளை சென்றடைவதை உறுதி செய்யுமாறு நாங்கள் காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம், இது தொடர்பாக எஸ்பிஜியுடன் நாங்கள் ஆலோசித்தோம்.... நாங்கள் விஷயங்களைப் பின்தொடர்ந்து வருகிறோம்," என்று அவர் கூறினார்.

இதையும் படிங்க : Cyclone Mocha : மிகப்பெரிய புயல் தாக்க போகிறது.. மே 11 வரை உஷார் நிலையில் உள்ள மாநிலங்களின் பட்டியல்..

click me!