மோக்கா புயல் காரணமாக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன
தென்கிழக்கு வங்கக்கடலில் மோக்கா என்ற புயல் உருவாகும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்லது. மே 7-ம் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 8-ம் தேதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மே 9-ம் தேதி புயலாக மாறக்கூடும் எனவும் புயலுக்கு மோக்கா என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக வரும் 10-ம் தேதி வரை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு : இந்த புயல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சுற்றி வலுவடையக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிக மழை பெய்யும் என்பதால், மாநிலம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : Explained : மணிப்பூர் ஏன் போர்க்களமாக மாறியது..? தற்போதைய நிலை என்ன..?
ஒடிசா: வங்கக் கடலில் புயல் உருவாகக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) கணித்ததை அடுத்து, முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அரசு மோட்சத்தை எதிர்கொள்ளும் பட்சத்தில் அனைத்து துறைகளும் தயாராக இருக்கும்படி நவீன் கேட்டுக் கொண்டார். கடந்த 4 ஆண்டுகளில், மே மாதத்தில் ஒடிசா 4புயல்களை கண்டுள்ளது.
மேற்கு வங்கம்: மேற்கு வங்கத்தில் புயல் பாதிப்புக்குள்ளாகும் அனைத்து மாவட்டங்களும் உஷார் படுத்தப்பட்டுள்ளன. . மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) தயார் நிலையில் உள்ளன. மே 08 முதல் 11 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆழ்கடலில் இருப்பவர்கள் வரும் 7-ம் தேதிக்குள் கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ஜம்முவில் என்கவுண்ட்டர்.. 2 ராணுவ வீரர்கள் வீரமரணம்.. இண்டர்நெட் சேவை துண்டிப்பு..
ஆந்திரா: மோக்கா புயல் காரணமாக ஆந்திராவில் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்தின் சில பகுதிகளில் அதிகாரிகள் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு அம்மாநிலத்தின் பல பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.