நிறைவேறிய மோடியின் கேரண்டி! பெண்களின் வாழ்க்கையை மாற்றிய திட்டங்கள்!

By SG Balan  |  First Published Mar 6, 2024, 9:20 PM IST

2014 முதல் பத்து ஆண்டு ஆட்சியில் பெண்களின் நலனுக்காக மோடி அரசு செய்து வரும் பணிகள் என்னென்ன என்பதை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம். மேலும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்திலிருந்து இப்போது என்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதையும் அறியலாம்.


பிரதமர் நரேந்திர மோடியின் அரசு தொலைநோக்குத் திட்டங்கள் மூலம் பெண்களின் வளர்ச்சியை நோக்கிச் செயல்பட்டு வருகிறது. 2014 முதல் பத்து ஆண்டு ஆட்சியில் பெண்களின் நலனுக்காக மோடி அரசு செய்து வரும் பணிகள் என்னென்ன என்பதை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம். மேலும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்திலிருந்து இப்போது என்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதையும் அறியலாம்.

மக்களவை மற்றும் சட்டப் பேரவையில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பது நீண்ட காலமாக கவலையளிக்கும் விஷயமாக இருந்து வருகிறது. இந்த விஷயத்தில் பெரிய முயற்சி எடுத்து நரேந்திர மோடியின் அரசு பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இது பெண்கள் அதிகாரத்தில் பங்குபெறுவதை அதிகரிக்கும்.

Tap to resize

Latest Videos

இந்தியாவின் பாலின விகிதம்

முன்னதாக, ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருந்த நாடுகளில் இந்தியாவும் இருந்தது. பிரதமர் மோடி மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து நிலைமை மாறிவிட்டது. இப்போது இந்தியாவின் பாலின விகிதம் 1020 ஆக உள்ளது. அதாவது 1000 ஆண்களுக்கு 1020 பெண்கள் உள்ளனர். வேலை செய்யும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு மிகவும் முக்கியமானது. இது 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு குற்றவாளி பற்றி தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம்: என்.ஐ.ஏ. அறிவிப்பு

சுகன்யா சம்ரித்தி யோஜனா

சுரக்ஷித் மாத்ரித்வா அபியான் திட்டத்தின் கீழ் 4.73 கோடி கர்ப்பிணிப் பெண்கள் தங்களைப் பரிசோதித்துள்ளனர். செல்வமகள் திட்டம் எனப்படும் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் கீழ் 3.2 கோடி சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. உஜ்வாலா திட்டம் பெண்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. சுமார் 10 கோடி குடும்பங்கள் எல்பிஜி கேஸ் சிலிண்டர்களைப் பெற்றுள்ளன.

பெண்களுக்கு பாதுகாப்பான வீட்டு வசதி கிடைப்பதற்காக மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தில் 72% க்கும் அதிகமான வீடுகள் பெண்களின் பெயரில் தனியாகவோ அல்லது கூட்டாகவோ கட்டப்பட்டுள்ளன.

மகப்பேறு பாதுகாப்பிற்கும் பிரதமர் மோடியின் அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதன் விளைவாக 2014-16ல், பிரசவத்தின்போது தாய்மார்கள் உயிரிழக்கும் விகிதம் லட்சத்தில் 130 ஆக இருந்தது. இது 2018-20ல் 97 ஆகக் குறைந்துள்ளது.

முத்தலாக் ஒழிப்பு

முத்தலாக்கை முடிவுக்கு கொண்டு வரும் முக்கிய முடிவை நரேந்திர மோடி அரசு எடுத்துள்ளது. இது முஸ்லிம் பெண்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது. மேலும் பெண்களை வணிகத்துறையில் பெரிய அளவில் ஊக்குவித்து வருகிறது. முத்ரா திட்டத்தின் கீழ், பெண் தொழில்முனைவோருக்கு 69% கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில், ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டத்தின் பயனாளிகளில் 84% பேர் பெண்கள். முப்படைகளிலும் அக்னிவீரர்களாக பெண்கள் பணியமர்த்தப்படுகிறார்கள்.

உக்ரைன் - ரஷ்யா போரில் ஹைதராபாத் இளைஞர் பலி! வேலை தேடி போனவருக்கு நேர்ந்த விபரீதம்!

கழிப்பிட வசதி

கிராமத்தின் ஏழைப் பெண்கள் கழிவறைக்குச் செல்ல இருளில் காத்திருக்க வேண்டியிருந்தது. பெண்களின் இந்த வலியைப் புரிந்துகொண்ட பிரதமர் மோடி, 2014 அக்டோபர் 2ஆம் தேதி தூய்மை இந்தியா இயக்கத்தைத் தொடங்கினார். இதன் மூலம் கோடிக்கணக்கான பெண்களுக்கு வீட்டுக் கழிப்பறை வசதி கிடைத்தது. இந்தியா திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத நாடாக மாறியது.

14.45 கோடி வீடுகளுக்கு சுத்தமான குடிநீர்

நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான குடிநீர் சென்றடைவதை உறுதி செய்வதற்காக, மத்திய அரசு 15 ஆகஸ்ட் 2019 அன்று ஜல் ஜீவன் இயக்கத்தைத் தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ், 14.45 கோடி வீடுகளுக்கு குழாய் நீர் சென்றடைந்துள்ளது. பெண்கள் குடிநீரை தேடி பல கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டிய அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பெண்களின் வாழ்க்கையில் எப்படி மாற்றங்கள் வந்தன?

முன்பு பெண்கள் ஏரி, குளங்கள், கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்க பல கிலோமீட்டர்கள் நடந்து செல்ல வேண்டியிருந்தது. தற்போது 14.27 கோடி வீடுகளுக்கு குழாய் நீர் வந்துள்ளது.

முன்பு பெண்கள் மரம் அல்லது நிலக்கரி மூலம் உணவு சமைக்க வேண்டும். புகையால் கண்கள் எரிந்தன. இப்போது உஜ்வாலா திட்டத்தின் கீழ் 10 கோடி எல்பிஜி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

முன்பு பெண்கள் திறந்த வெளியில் மலம் கழிக்க வேண்டிய நிலை இருந்தது. இதனால் பெண்கள் இருளுக்காகக் காத்திருக்க வேண்டியிருந்தது. இப்போது ஸ்வச் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் நாடு முழுக்க 12 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. பெண்கள் இருளில் திறந்த வெளியைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை.

முன்பெல்லாம், மின்சாரம் இல்லாததால், பெண்கள் வெளிச்சத்திற்காக மண்ணெண்ணெய் விளக்கை பயன்படுத்த வேண்டிய நிலை இருந்தது. வெளிச்சம் குறைவாக இருந்ததால் குழந்தைகள் படிக்க முடியாமல் சிரமப்பட்டனர். தற்போது 2.86 குடும்பங்களுக்கு சௌபாக்யா மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

பெயர் சூட்டும் வைபவத்துக்கு எட்டு பக்க அறிக்கை... முதல்வர் ஸ்டாலினை பங்கமாக கலாய்த்த அண்ணாமலை

click me!