பிரதமர் மோடி நாளை ஜம்மு-காஷ்மீர் பயணம் மேற்கொள்கிறார். அப்போது, பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நாட்டுக்கு அவர் அர்ப்பணிக்கவுள்ளார்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகருக்கு பிரதமர் மோடி மார்ச் 7ஆம் தேதி (நாளை) பயணம் மேற்கொள்கிறார். நண்பகல் 12 மணியளவில், ஸ்ரீநகரில் உள்ள பக்ஷி ஸ்டேடியத்தை அடையும் பிரதமர், அங்கு 'வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த ஜம்மு காஷ்மீர்' நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
இந்த நிகழ்ச்சியின் போது, ஜம்மு-காஷ்மீரில் வேளாண் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக சுமார் ரூ.5000 கோடி மதிப்புள்ள 'முழுமையான விவசாய மேம்பாட்டு திட்டத்தை' பிரதமர் தேசத்திற்கு அர்ப்பணிப்பார். ஸ்ரீநகரில் உள்ள 'ஹஸ்ரத்பால் ஆலயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சி' திட்டம் உட்பட உள்நாட்டு சுற்றுலா மற்றும் பிரசாதத் (புனித யாத்திரை புத்துணர்ச்சி மற்றும் ஆன்மீக, பாரம்பரிய விரிவாக்க இயக்கம்) திட்டத்தின் கீழ் ரூ.1400 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சுற்றுலாத் துறை தொடர்பான பல திட்டங்களையும் அவர் தேசத்திற்கு அர்ப்பணிப்பார்.
‘உங்கள் நாட்டைப் பாருங்கள் மக்கள் தேர்வு 2024' மற்றும் 'இந்தியாவுக்கு செல்லுங்கள்' என்னும் உலக அளவிலான பிரச்சாரத்தைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார். சவால் அடிப்படையிலான சுற்றுலாத்தல மேம்பாடு திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட சுற்றுலாத் தலங்களையும் அவர் அறிவிப்பார். இதுதவிர, ஜம்மு-காஷ்மீரில் புதிதாக அரசுத் தேர்வில் சேரும் சுமார் 1000 பேருக்கு பணி நியமன ஆணைகளைப் பிரதமர் வழங்குவார், மேலும் பெண் சாதனையாளர்கள், லட்சாதிபதி சகோதரிகள், விவசாயிகள், தொழில்முனைவோர் உள்ளிட்ட பல்வேறு அரசுத் திட்டங்களின் பயனாளிகளுடனும் கலந்துரையாடவுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் வேளாண் பொருளாதாரத்திற்கு பெரும் ஊக்கமளிக்கும் ஒரு நடவடிக்கையாக, 'முழுமையான வேளாண் மேம்பாட்டுத் திட்டத்தை' பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டம் என்பது ஜம்மு காஷ்மீரில் தோட்டக்கலை, வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகிய வேளாண் பொருளாதாரத்தின் மூன்று முக்கிய களங்களில் முழு அளவிலான செயல்பாடுகளை உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைந்த திட்டமாகும். இந்தத் திட்டம் சுமார் 2.5 லட்சம் விவசாயிகளை பிரத்யேக தக்ஷ் கிசான் போர்ட்டல் மூலம் திறன் மேம்பாட்டுடன் ஆயத்தப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், சுமார் 2000 உழவர் சேவை மையங்கள் நிறுவப்பட்டு, விவசாய சமூகத்தின் நலனுக்காக வலுவான மதிப்புச் சங்கிலிகள் அமைக்கப்படும். இந்தத் திட்டம் ஜம்மு-காஷ்மீரில் உள்ள லட்சக்கணக்கான குறு குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வழிவகுக்கும்.
நாடு முழுவதும் உள்ள முக்கிய புனித தலங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களின் ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்துவதே பிரதமரின் தொலைநோக்குப் பார்வையாகும். இதற்கு ஏற்ப, பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து, உள்நாட்டு சுற்றுலா மற்றும் பிரசாதத் திட்டங்களின் கீழ் ரூ.1400 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல முயற்சிகளைத் தொடங்குவார். பிரதமரால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படவுள்ள திட்டங்களில் ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் 'ஹஸ்ரத்பால் ஆலயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சி' மேம்பாடு; மேகாலயாவில் வடகிழக்கு சுற்றுவட்டாரத்தில் சுற்றுலா வசதிகள் மேம்படுத்தப்பட்டன; பீகார் மற்றும் ராஜஸ்தானில் ஆன்மீக சுற்றுலா; பீகாரில் கிராமப்புற மற்றும் தீர்த்தங்கர் சுற்றுலா; தெலங்கானாவின் ஜோகுலம்பா கட்வால் மாவட்டத்தில் உள்ள ஜோகுலம்பா தேவி கோயில் மேம்பாடு; மத்தியப் பிரதேசத்தின் அன்னுபூர் மாவட்டத்தில் உள்ள அமர்கந்தக் கோயிலின் மேம்பாடு ஆகியவை இதில் அடங்கும்.
ஹஸ்ரத்பால் ஆலயத்திற்கு வருகை தரும் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை உருவாக்கும் முயற்சியிலும், அவர்களின் முழுமையான ஆன்மீக அனுபவத்தை மேம்படுத்தவும், 'ஹஸ்ரத்பால் ஆலயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சி' திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. சன்னதியின் எல்லைச் சுவர் கட்டுமானம் உட்பட முழுப் பகுதியின் தள மேம்பாடு திட்டத்தின் முக்கிய கூறுகளில் இதில் அடங்கும். ஹஸ்ரத்பால் ஆலய வளாகத்தின் ஒளியூட்டல், சன்னதியைச் சுற்றியுள்ள படித்துறைகள், தேவ்ரி பாதைகளை மேம்படுத்துதல், சூஃபி விளக்க மையம் அமைத்தல், சுற்றுலா உதவி மையம் கட்டுதல், அறிவிப்புப் பலகைகளை நிறுவுதல், பல அடுக்கு மாடி கார் பார்க்கிங், ஆலயத்தின் பொது கழிப்பிட தொகுதி மற்றும் நுழைவு வாயில் கட்டுமானமும் இந்தத் திட்டத்தில் செயல்படுத்தப்படும்.
நாடு முழுவதும் பரந்த அளவிலான புனித யாத்திரை மற்றும் சுற்றுலா தளங்களை மேம்படுத்தும் சுமார் 43 திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள அன்னாவரம் கோயில் போன்ற முக்கியமான மதத் தலங்களும் இதில் அடங்கும்; தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களிலும், புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்திலும் உள்ள நவக்கிரக கோயில்கள்; அருள்மிகு சாமுண்டீஸ்வரி தேவி திருக்கோயில், மைசூர் மாவட்டம், கர்நாடகா. கர்ணி மாதா மந்திர், பிகானேர் மாவட்டம் ராஜஸ்தான்; மா சிந்த்பூர்ணி கோயில், உனா மாவட்டம், இமாச்சல பிரதேசம்; பசிலிக்கா ஆஃப் போம் ஜீசஸ் சர்ச், கோவா ஆகியவை இதில் அடங்கும்.
இந்த நிகழ்ச்சியின் போது, சவால் அடிப்படையிலான சுற்றுலாத்தல மேம்பாடு திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 42 சுற்றுலாத் தலங்களைப் பிரதமர் அறிவிக்கவுள்ளார். 2023-24 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்தப் புதுமையான திட்டம், சுற்றுலாத் தலங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
'உங்கள் நாட்டைப் பாருங்கள் மக்கள் தேர்வு 2024' என்ற வடிவத்தில், சுற்றுலா குறித்த தேசத்தின் துடிப்பை அடையாளம் காணும் நாடு தழுவிய முதல் முயற்சியைப் பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார். வெளிநாடுவாழ் இந்தியர்கள் வியத்தகு இந்தியாவின் தூதர்களாக மாறுவதை ஊக்குவிப்பதற்கும், இந்தியாவுக்கு சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் இந்தியாவுக்கு செல்லுங்கள் என்ற உலகளாவிய பிரச்சாரத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கவுள்ளார்.
இந்தியரல்லாத குறைந்தது 5 நண்பர்களையாவது இந்தியாவுக்கு வர ஊக்குவிக்க வேண்டும் என்று வெளிநாடுவாழ் இந்தியர்களைக் கேட்டுக்கொண்ட பிரதமரின் அறைகூவலின் அடிப்படையில் இந்தப் பிரச்சாரம் தொடங்கப்படவுள்ளது.
I will be in Srinagar tomorrow, 7th March to take part in the ‘Viksit Bharat Viksit Jammu Kashmir’ programme. Various development works will also be dedicated to the nation. Notable among them are works worth over Rs. 5000 crore relating to boosting the agro-economy. Various…
— Narendra Modi (@narendramodi)
பிரதமர் மோடி தனது ஜம்மு காஷ்மீர் பயணம் குறித்து தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “வளர்ச்சியடைந்த பாரதம்; வளர்ச்சியடைந்த காஷ்மீர் நிகழ்ச்சியில் நாளை ஸ்ரீநகர் செல்லவுள்ளேன். பல்வேறு வளர்ச்சிப் பணிகளும் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படவுள்ளன. வேளாண் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான ரூ.5000 கோடி மதிப்பிலான பணிகள் அவற்றில் குறிப்பிடத்தக்கவை. சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய பல்வேறு பணிகளும் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படவுள்ளன.” என்று பதிவிட்டுள்ளார்.