பக்தர்கள் கூட்டத்தை கையாள திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை ஆலோசனை கேட்டுள்ளது
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயில் மிகவும் புகழ்பெற்றது. இங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பணக்கார சுவாமியாக அறியப்படும் திருப்பதி கோயில், பக்தர்கள் வருகை புரிவதில் முன்னணி மத தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.
இந்த நிலையில், பக்தர்கள் கூட்டத்தை கையாள திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் அயோத்தி ரானர் கோயில் அறக்கட்டளை ஆலோசனை கேட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழா அண்மையில் நடைபெற்றது, ஐந்து வயது பாலகனாக குழந்தை ராமர் சிலை கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அக்கோயிலை ஸ்ரீராமர் கோயில் தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது.
அயோத்தி ராமர் கோயிலை பிரதமர் மோடி கடந்த ஜனவரி 22 ஆம் தேதி திறந்து வைத்தார், ஜனவரி 23ஆம் தேதி முதல் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குழந்தை ராமரை தரிசனம் செய்து வருகின்றனர். இதனால், அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கூட்டத்தை கட்டுபடுத்த முடியாமல் கோயில் நிர்வாகத்தினர் தவித்து வருகின்றனர். கோயில் திறக்கப்பட்டதில் இருந்து இதுவரை சுமார் 65 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளதாக ஸ்ரீராமர் கோயில் தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை செய்தித் தொடர்பாளர் சரத் ஷர்மா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பக்தர்கள் கூட்டத்தை கையாள திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் அயோத்தி ரானர் கோயில் அறக்கட்டளை ஆலோசனை கேட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, ராமர் கோயிலில் கூட்ட நெரிசல் மேலான்மையை ஒத்துழைப்போது இணைந்து மேற்கொண்டு வருகிறது. இந்த தகவலை இரு தரப்பை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கரும்பு விவசாயி சின்னம்: உச்ச நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி மேல்முறையீடு!
“ராமர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு திருப்திகரமாக தரிசனம் வழங்க செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து திருப்பதி தேவஸ்தானம் நிபுணர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. அயோத்தி அறக்கட்டளை அதிகாரிகளுக்கு கூட்டத்தை ஒழுங்குபடுத்துதல் மற்றும் வரிகளை நிர்வகிப்பது குறித்து திருப்பது தேவஸ்தான பிரதிநிதிகள் விளக்கமளித்தனர். அயோத்தி கோயில் அறக்கட்டளைக்கு வரிசைகளை நிர்வகித்தல் மற்றும் பக்தர்களுக்கு வழங்க வேண்டிய வசதிகள் குறித்த விரிவான அறிக்கையை அளித்துள்ளோம். அந்த அறிக்கை அவர்களது பரிசீலனையில் உள்ளது.” என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் 65,000 முதல் 70,000 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதாகவும், வைகுண்ட ஏகாதசி மற்றும் ரத சப்தமி போன்ற மங்களகரமான நாட்களில் இந்த எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.