பள்ளிப் பாடப்புத்தகங்களில் ராமாயணம், மகாபாரதத்தை சேர்க்க வேண்டும்.. NCERT குழு பரிந்துரை..

By Ramya s  |  First Published Nov 22, 2023, 11:07 AM IST

பள்ளிப் பாடப்புத்தகங்களில் ராமாயணம், மகாபாரதத்தை சேர்க்க வேண்டும் என்று என்சிஇஆர்டி குழு பரிந்துரைத்துள்ளது


சமூக அறிவியலுக்கான பள்ளி பாடத்திட்டத்தை திருத்தியமைக்க தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) ஒரு உயர்மட்டக் குழுவை அமைத்தது. கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட ஏழு பேர் கொண்ட இந்த குழு தற்போது தனது பரிந்துரைகளை வழங்கி உள்ளது. அதன்படி, ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை பாடப்புத்தகங்களில் சேர்க்கவும், வகுப்பறைச் சுவர்களில் அரசியலமைப்பின் முகப்புரையை எழுதவும் பரிந்துரைத்துள்ளது. கமிட்டியின் தலைவர் சிஐ ஐசக் இந்த தகவலை தெரிவித்தார்.

புதிய NCERT பாடப்புத்தகங்களை உருவாக்குவதற்கான அடித்தளத்தை அமைப்பதற்கான முக்கிய ஆவணமான சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து பல பரிந்துரைகளை செய்துள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த உயர்மட்ட குழுவின் தலைவர் ஐசக் இதுகுறித்து பேசிய போது “ 7 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ராமாயணம், மகாபாரதம் கற்பிப்பது முக்கியத்துவம் வாய்ந்தது எனவே சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை மாணவர்களுக்கு கற்பிக்க குழு வலியுறுத்தியுள்ளது. டீன் ஏஜ் பருவத்தில் மாணவர்கள் தங்கள் சுயமரியாதை, தேசபக்தி மற்றும் தேசத்தின் பெருமையை வளர்த்துக் கொள்கிறார்கள் என்று நாங்கள் நினைக்கிறோம்.

ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வெளிநாடுகளில் குடியுரிமை பெறுகின்றனர். தேசப்பற்று இல்லாததால், பிற நாடுகளில்அவர்கள்  குடியுரிமை பெறுகிறார்கள். எனவே, அவர்களின் வேர்களைப் புரிந்துகொள்வதும், தங்கள் நாட்டின் மீதும், கலாச்சாரத்தின் மீதும் அன்பை வளர்ப்பதும் அவர்களுக்கு முக்கியம். இப்போது சில கல்வி வாரியங்கள் மாணவர்களுக்கு ராமாயணத்தை கற்பித்தாலும், அவர்கள் அதை ஒரு கட்டுக்கதையாகவே கற்பிக்கிறார்கள். கட்டுக்கதை என்றால் என்ன? இந்தக் காவியங்களை மாணவர்களுக்குக் கற்பிக்காவிட்டால் கல்வி முறையின் எந்த நோக்கமும் இல்லை, அது தேச சேவையாக இருக்காது, ”என்று கூறினார்.

“ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை பாடத்திட்டத்தில் சேர்க்கும் பரிந்துரையும் ஏற்கனவே செய்யப்பட்டது. குழு புதிய பரிந்துரைகள் எதையும் செய்யவில்லை,'' என்றும் கூறினார்.

வகுப்பறைகளின் சுவர்களில் அரசியலமைப்பின் முகவுரையை எழுத பரிந்துரைக்கும் யோசனையை விளக்கிய ஐசக், “நமது அரசியலமைப்பு முன்னுரை உன்னதமானது. இது ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை உள்ளிட்ட சமூக விழுமியங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. எனவே, வகுப்பறைகளின் சுவர்களில் அதை எழுதுவதற்குப் பரிந்துரைத்துள்ளோம், அதனால் அனைவரும் புரிந்துகொண்டு கற்றுக்கொள்ளலாம்” என்று ஐசக் மேலும் கூறினார்.

பிரதமர் மோடி தலைமையில் இன்று மெய்நிகர் ஜி20 உச்சி மாநாடு!

பாடப்புத்தகங்களில் 'இந்தியா' என்ற பெயரை 'பாரத்' என்று மாற்றவும் குழு பரிந்துரைத்துள்ளதாக ஐசக் ஏற்கனவே கூறியிருந்தார். 3 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களில் பண்டைய வரலாற்றிற்குப் பதிலாக ‘கிளாசிக்கல் ஹிஸ்டரி’ (classical History) என்ற பகுதியை அறிமுகப்படுத்த உள்ளது.NCERT தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 க்கு இணங்க பள்ளி பாடத்திட்டத்தை திருத்தி வருகிறது. புதிய NCERT பாடப்புத்தகங்கள் அடுத்த கல்வி அமர்வுக்குள் தயாராகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!