
தசரா விழாவையொட்டி பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறும் விழாவில் ராவணன், கும்பகர்ணன், உருவ பொம்மையுடன் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் உருவ பொம்மையும் எரிக்கப்பட தயார் நிலையில் உள்ளது.
ஆண்டுதோறும் தசரா விழாவை கொண்டாடும் மக்கள் தசரா பண்டிகையின் இறுதியில் ராவணன், கும்பகர்ணன் மற்றும் மேகநாதன் உருவ பொம்மைகளை எரிப்பது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டும் தசரா பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்த வருடம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடைபெறும் தசரா விழாவில் பயங்கரவாதத்தை வளர்த்துவரும் பாகிஸ்தானை கண்டிக்கும் வகையில், ராவணன், கும்பகர்ணன், உருவ பொம்மையுடன் நவாஸ் ஷெரீப்பின் உருவ பொம்மையும் எரிக்கப்பட உள்ளது.
இது பற்றி பஞ்சாப் அமைச்சர் அணில் ஜோஷி கூறும்போது,
பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு உறைவிடம் அளித்து, பயங்கரவாதிகளை தயாரித்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர் இதுவே நாங்கள் நவாஸ் செரீப் உருவ பொம்மையை உருவாக்க காரணம் என தெரிவித்தார்.
மேலும், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உருவ பொம்மையை போன்று பாகிஸ்தானும் அழியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.