
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபுநாயுடுவின் மகன் பெண்களுடன் சுற்றும் படங்கள் இணையதளத்தில் மீண்டும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ். இவர் தெலுங்கு தேச கட்சியின் தேசிய செயலாளராக உள்ளார்.
இவர் மூத்த அமைச்சர்களை மிரட்டுவதாக லோகேஷ் மீது சமீபத்தில் புகார் எழுந்தது.
இதற்கு பதிலளித்த லோகேஷ், தான் அமைச்சர்களை மிரட்டவில்லை என்றும், தான் அப்படி வளர்க்கப்படவில்லை. நல்ல கலாச்சாரத்துடன் வளர்ந்தவன் என்றும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி போல் தந்தைக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த மாட்டேன் என்றும் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் லோகேஷ் படித்தபோது,
அவர் கடற்கரை ஓரம் கவர்ச்சியான உடை அணிந்த ஒரு இளம்பெண்ணுடன் இருப்பது போலவும், மதுபாரில் அமர்ந்திருப்பது போலவும் அவரது தோளில்2 இளம்பெண்கள் சாய்ந்து கிடப்பது போன்ற புகைப் படங்களை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
முன்னதாக, அமெரிக்காவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடுவின் மகன் பெண்களுடன் சுற்றும் படங்கள் இணையதளத்தில் வெளியானது. இந்த படங்கள், பின்னர் அந்த இணையதளத்தில் இருந்து அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.