கோரிக்கை நிராகரிப்பு.. வேறு வழியில்லாமல் சரணடைந்தார்.. சிறையில் அடைக்கப்பட்ட சித்து..!

By vinoth kumarFirst Published May 21, 2022, 9:12 AM IST
Highlights

சித்து தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா முன்னிலையில், ‘சித்துவுக்கு உடல்நல பிரச்னைகள் உள்ளது. அதனால் சரணடைய சில வாரங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஆனால், அதனை நீதிபதிகள் நிராகரித்து சரணடைய வேண்டும் என தெரிவித்தனர்.

ஒராண்டு சிறை தண்டனை தண்டனை வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் நவ்ஜோத் சிங் சித்து சரணடைந்ததையடுத்து சிறையில் அடைக்கப்பட்டார். 

கடந்த 1988 ஆம் ஆண்டு, நவ்ஜோத் சிங் சித்து மற்றும் அவரது நண்பர் ரூபீந்தர் சாந்து ஆகிய இருவரும் பாட்டியாலாவைச் சேர்ந்த குர்மான் சிங் (65) என்பவருடன் கார் பார்க்கிங் தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் சித்து, குர்மான் சிங்கை காரிலிருந்து வெளியே இழுத்து தாக்கியுள்ளார். இதில் குர்மான் சிங் காயமடைந்தார். பின்னர் அவர் உயிரிழந்தார். 

இந்தச் சம்பவம் தொடர்பாக பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இந்த வழக்கு பல ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு இந்த வழக்கில் நவ்ஜோத் சிங் சித்து குற்றமற்றவர் என்று பாட்டியாலா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது, சித்து பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். பாட்டியாலா நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து குர்மான் சிங்கின் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு விசாரணை கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. விசாரணைகள் அனைத்தும் முடிந்த நிலையில், சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. 

இந்நிலையில், சித்து தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா முன்னிலையில், ‘சித்துவுக்கு உடல்நல பிரச்னைகள் உள்ளது. அதனால் சரணடைய சில வாரங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஆனால், அதனை நீதிபதிகள் நிராகரித்து சரணடைய வேண்டும் என தெரிவித்தனர். இந்நிலையில், தனது கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்ததை தொடர்ந்து, பாட்டியாலா நீதிமன்றத்தில் நேற்று மாலை சித்து சரணடைந்தார். அவரை சிறையில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, சிறையில் சித்து அடைக்கப்பட்டார்.

click me!