குர்நாம் சிங் என்பவர் உயிரிழந்த வழக்கு... நீதிமன்றத்தில் சரணடைந்தார் நவ்ஜோத் சிங் சித்து!!

By Narendran SFirst Published May 20, 2022, 5:31 PM IST
Highlights

சாலை தகராறு வழக்கில் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாட்டியாலா நீதிமன்றத்தில், நவ்ஜோத் சிங் சித்து சரணடைந்தார். 

சாலை தகராறு வழக்கில் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாட்டியாலா நீதிமன்றத்தில், நவ்ஜோத் சிங் சித்து சரணடைந்தார். பஞ்சாப் மாநிலத்தில், டிசம்பர் 27, 1988 அன்று, பாட்டியாலாவில் வசிக்கும் குர்னாம் சிங் என்பவருடன், வாகனம் நிறுத்தும் இடம் தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது சித்து மற்றும் அவருடன் இருந்த அவரது நண்பர் ரூபிந்தர் சிங் சந்து, ஆகியோரும் குர்னாம் சிங்கை அவரது காரில் இருந்து வெளியே இழுத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலை தொடர்ந்து, குர்னாம் சிங் உயிரிழந்துள்ளார்.

இதுத்தொடர்பான வழக்கில் கடந்த 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி அன்று பாட்டியாலாவின் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி, சித்துவையும் அவரது உடனிருந்தவர்கள் ஆதாரம் இல்லாத காரணத்தால் வழக்கில் இருந்து விடுதலை செய்தது. இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு மேல்முறையீடு செய்தனர். அதில், சித்துவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

நவ்ஜோத் சிங் சித்து சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, உச்சநீதிமன்ற நீதிபதி கன்வில்கர் அமர்வு முன்பு ஆஜராகி கூறுகையில், சித்து சரணடைவார். அவருக்கு உடல்நலன் சார்ந்த பிரச்னை உள்ளது. அது சரி செய்யப்பட வேண்டும். இதனால், சரண் அடைவதற்கு அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதி கன்வில்கர், முறையாக மனு தாக்கல் செய்து, அதனை தலைமை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லும்படி அறிவுறுத்தினர். இதற்கிடையே நவ்ஜோத் சிங் சித்துவின் மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததை அடுத்து வீட்டில் இருந்து காரில் புறப்பட்ட நவ்ஜோத் சிங் சித்து பாட்டியாலா நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

click me!