ஆட்சியை பறிகொடுத்த காங்கிரஸ்.. கட்சி பொறுப்பிலிருந்து நவ்ஜோத் சிங் சித்து அதிரடியாக விலகல்..!

Published : Mar 16, 2022, 11:51 AM IST
ஆட்சியை பறிகொடுத்த காங்கிரஸ்.. கட்சி பொறுப்பிலிருந்து நவ்ஜோத் சிங் சித்து அதிரடியாக விலகல்..!

சுருக்கம்

 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்யுமாறு காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி நேற்று உத்தரவிட்டார்.

தேர்தல் தோல்வி எதிரொலியாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா செய்துள்ளார்.

தேர்தல் தோல்வி

நடந்து முடிந்த உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. பஞ்சாப்பில் முதல் முறையாக ஆம் ஆத் கட்சி ஆட்சியை பிடித்தது. மற்ற 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியமைக்க உள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிக மோசமான தோல்வியைச் சந்தித்தது. உத்தராகண்ட், மணிப்பூர், கோவா மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியால் வெல்ல முடியவில்லை. மேலும் பஞ்சாபில் ஆட்சியையும் பறிகொடுத்துள்ளது.

இதையும் படிங்க;- சோனியா காந்தி குடும்பத்தினர் காங்கிரஸ் தலைமைப் பதவியிலிருந்து விலக வேண்டும்: கபில் சிபல் போர்க்கொடி

காரியக் கமிட்டிக்கூட்டம்

அடுத்தடுத்த தோல்விகளால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அதிருப்தியில் இருந்தனர். இதனையடுத்து, கடந்த வாரம் கூடிய காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கூட்டத்தில் கூட தலைவர் பதவி பற்றிப் பேசப்பட்டநிலையில் பெரிதாக எந்த மாற்றமும் நடக்காமல், மீண்டும் தலைவராக சோனியா காந்தியே நீடிப்பார் என முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில், 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்யுமாறு காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி நேற்று உத்தரவிட்டார்.

சித்து விலகல்

இந்நிலையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா செய்துள்ளார். முக்கியமாக பஞ்சாப்பில் ஆட்சியை பறிகொடுத்த பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க;- "காங்கிரசுக்கு நோ.. கூட்டணிக்கு ஓகே.." 3ம் அணியை இணைக்கும் மம்தா .. ஸ்கெட்ச் யாருக்கு தெரியுமா ?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இண்டிகோ சிஇஓ பீட்டர் எல்பர்ஸ் கையெடுத்து கும்பிட்டு கதறல்..! மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கேட்டு விளக்கம்
மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!