INS Vikrant:LCA Tejas:புதிய வரலாறு! ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் தேஜாஸ் போர் விமானத்தை தரையிறக்கி சாதனை

By Pothy RajFirst Published Feb 8, 2023, 11:57 AM IST
Highlights

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பலில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இலகுரக போர்விமானமான(LCA) தேஜாஸ் போர்விமானத்தை தரையிறங்கி வரலாற்று சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பலில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இலகுரக போர்விமானமான(LCA) தேஜாஸ் போர்விமானத்தை தரையிறங்கி வரலாற்று சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானம்தாங்கி கப்பலில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் விமானத்தை தரையிறக்கியது இந்திய கப்பற்படையின் புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. விக்ராந்த் விமானம்தாங்கிக் கப்பலில் இருந்து புறப்பட்டுச் சென்ற தேஜாஸ் போர்விமானம், அதே கப்பலில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது

லடாக்கில் நியோமா விமானப்படை தளம் ரூ.230 கோடி செலவில் விரிவாக்கம்

கடந்த ஆண்டு செப்டம்பரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போர்விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் இந்தியப்படையி்ல் சேர்க்கப்பட்டது. இந்தக் கப்பலின் 76 சதவீதம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது.

இந்தக் கப்பலில் 30 விமானங்களை நிறுத்த முடியும். போர்விமானங்களான மிக்-29கே, கமோவ்-31 ஹெலிகாப்டர்கள், எம்எச்-60ஆர் ஹெலிகாப்டர்கள், அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர்களைநிறுத்தலாம்.
ரூ.20ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 45 ஆயிரம் டன் எடையில் விக்ராந்த் கப்பல், கொச்சின் கப்பல்கட்டும் தளத்தில் கட்டப்பட்டது.

இதுபோன்ற மிகப்பெரிய அளவில் போர்க்கப்பலை கட்டும் திறன் அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், சீனா நாடுகளுக்கு மட்டுமே உண்டு. கடந்த 1961 முதல் 1997ம் ஆண்டுவரை இந்திய கப்பற்படையில் பணியாற்றிய ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலின் பெயரே இதற்கும் சூட்டப்பட்டது. இந்தியாவின் கப்பற்படை வலிமையை எடுத்துக்காட்ட 2வது விமானம்தாங்கிக் கப்பல் கட்டப்பட்டு வருகிறது. 

துருக்கிக்கு உதவிக்கரம் நீட்டும் இந்தியா - முதல் கட்ட நிவாரணம் விமானம் மூலம் புறப்பட்டது

இந்திய கப்பற்படை தரப்பில் 4வது விமானம்தாங்கிக் கப்பல் விக்ராந்த். 1961-1997 வரை முதல் விக்ராந்த் கப்பலும், 1987 முதல் 2016 வரை ஐஎன்எஸ் விராட் கப்பலும், 2013முதல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா கப்பலும் உள்ளன.

ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் 61 மீட்டர் உயரம், 12,500 சதுரமீட்டர் அகலம் கொண்டது. 7500 நாட்டில் மைல் செல்லக்கூடியது, அதிகபட்சமாக 28 நாட்டிக்கல் மைல் வேகத்திலும்செல்லும் கப்பலில் 1600 ஊழியர்கள் இருப்பார்கள்.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில், உள்நாட்டில் தயாரிக்ககப்பட்ட இலகுரக போர்விமானமான தேஜாஸ் விமானத்தை தரையிறக்கி இருப்பது சாதனையாகும். தேஜாஸ் விமானம் ஒரு எஞ்சின், குறைந்த எடை கொண்ட அதிநவீன சூப்பர்சோனிக் விமானமாகும். இந்த போர்விமானம் 25 வினாடிகளில் 240 கி.மீ வேகத்தை அடையும் திறன் கொண்டது.

 

Excellent! The efforts towards Aatmanirbharta are on with full vigour. https://t.co/CJxhFNlUIM

— Narendra Modi (@narendramodi)

இந்த தேஜாஸ் விமானத்தின் முன்னாள் விமானி ஜெய்தீப் மலோன்கர் கூறுகையில் “ உள்நாட்டில் தயாரி்க்கப்பட்ட விக்ராந்த் போர்க்கப்பலில், அதிவேகத்தில் செல்லக்கூடிய தேஜாஸ் விமானத்தை ஒரே திசையில் தரையிறக்கியது சாதனை. கடல்கொந்தளிப்பான சூழலில் இதுபோன்றுஇலகுரக விமானத்தை தரையிறக்குவது கடினம். 

உலகளவில் எரிசக்தி துறை முதலீட்டுக்கு சிறந்தநாடு இந்தியா! முதலீ்ட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

கப்பலில் விமானத்தை தரையிறக்குவது சாதாரணமானது அல்ல. விமானம் கப்பலை நெருங்கும்போது வேகத்தைக் குறைக்க வேண்டும், அதாவது முழுமையாக வேகத்தை குறைத்தால்தான் கப்பலில் தரையிறக்க முடியும். குறிப்பாக 2.5 வினாடிகளில் கப்பலை கடந்துவிடும் தேஜஸ்விமானம்.

 

LCA Navy Landing and Take Off https://t.co/t1AakOn2pi pic.twitter.com/Q9fi91tfB1

— SpokespersonNavy (@indiannavy)

அதற்குள் விமானத்தின் வேகத்தை தரையிறங்கத் தொடங்கும்போதே குறைத்துவர வேண்டும். மணிக்கு 240கி.மீ வேகத்தில் பறக்கும் தேஜாஸ் விமானத்தை சிறிய கப்பலான விக்ராந்தில் தரையிறக்கியது சாதனைக்குரியதுதான்” எனத் தெரிவித்தார்

ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் தேஜாஸ் விமானத்தை தரையிறக்கியதை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். ட்விட்டரில் அவர் பதிவிட்ட கருத்தில் “ அற்புதம்! ஆத்மநிர்பாரத் அடைவதற்கான பணிகள் முழுத்தீவிரத்தில் நடக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
 

click me!