Millet khichdi: 7 நிமிடத்தில் சிறுதானிய கிச்சடி! பிரதமர் மோடிக்கு அமைச்சர் புகழாரம்!

By SG BalanFirst Published Feb 8, 2023, 11:15 AM IST
Highlights

ஏழு நிமிடங்களுக்குள் சிறுதானிய கிச்சடி தயாரித்த சமையல் கலைஞர் ரன்பீருக்கு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பாராட்டு தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு இந்தியாவை உலகளாவிய சிறுதானிய மையமாக மாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

இதன்படி மத்திய அரசு சிறுதானியங்கள் பயிடுவதையும் பயன்படுத்துவதையும் ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. அந்த வகையில் இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சூரிய சக்தியில் இயங்கும் அடுப்பில் சிறுதானிய உணவுகள் சமைக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் சமையல் கலைஞர் ரன்வீர் சோலார் அடுப்பில் சிறுதானிய கிச்சடி செய்துகாட்டினர். “சிறுதானங்களை சமைக்க அதிக நேரம் ஆகும் என்ற தவறான நம்பிக்கையை தகர்க்கும் வகையில் இந்த கிச்சடி 7 நிமிடத்தில் செய்து முடிக்கப்பட்டு இருக்கிறது” என்று ரன்வீர் குறிப்பிட்டார்.

Watch l Chef Brar explained how the energy efficient Solar Cooktop is perfectly suited for Indian cooking. Also informed us that millets taking a long time to cook was a myth - this khichdi was ready in 7 mins, faster than pasta: Union Minister pic.twitter.com/WyJaMrwbr6

— Prasar Bharati News Services & Digital Platform (@PBNS_India)

உடன்கட்டை ஏறுவதை பெருமையாக பேசுவது வெட்கப்படவைக்கும் செயல்... பாஜக உறுப்பினருக்கு கனிமொழி எம்.பி. கண்டனம்!!

இந்த நிகழ்வில் பயன்படுத்தப்பட்ட சூர்ய நூதன் சோலார் அடுப்பு இந்தியன் ஆயில் நிறுவனமும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகமும் இணைந்து உருவாக்கியது ஆகும்..

கிச்சடியை சுவைத்துப் பார்த்த பிறகு ட்விட்டரில் பதிவிட்ட அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, “சமையல் கலைஞர் ரன்வீன் சிறுதானிய கிச்சடியை பாஸ்தாவை விட வேகமாக சமைத்துக் காட்டினார். சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிக்குக் கிடைத்த பலன் இது” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா. 2023ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாகக் அறிவிக்க வேண்டும் என்று இந்தியா பரிந்துரைத்ததை ஏற்று 2023ஆம் ஆண்டு சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டது. அதனை முன்னிட்டு இந்தியாவில் சிறுதானிய பயன்பாட்டை மக்கள் இயக்கமாக மாற்றவேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

Nyoma ALG: லடாக்கில் நியோமா விமானப்படை தளம் ரூ.230 கோடி செலவில் விரிவாக்கம்

click me!