சுகாதார கேடுகளை சரிபார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மோசமான காற்றின் தரம் குறித்து டெல்லி அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது
டெல்லியில் மோசமான காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கான அரசின் செயல் திட்டம் எந்த உறுதியான முன்மொழிவுகளையும் வழங்கவில்லை என சுட்டுக்காட்டியுள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம், டெல்லி வாசிகள், குறிப்பாக வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், ஆஸ்துமா நோயாளிகள் எதிர்கொள்ளும் கடுமையான உடல்நலக் கேடுகளைக் கருத்தில் கொண்டு, மாசுபாட்டைக் குறைக்க சிறந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.
“காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும், தரத்தை மேம்படுத்தவும் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக பல்வேறு அதிகாரிகளின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்வது கடினம்.” என டெல்லி காற்றுத் தரக் குறியீட்டை சுட்டிக்காட்டி தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.
சறுக்குவழி, நாளொன்றுக்கு 3 குண்டு வெடிப்பு: உத்தரகாண்ட் சுரங்க மீட்பு புதிய அப்டேட்!
மேலும், பொதுமக்கள் எதிர்கொள்ளும் கடுமையான உடல்நலக் கேடுகளை எடுத்துக்காட்டும் செய்தி அறிக்கையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான அறிக்கையை ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்யுமாறும் டெல்ல்லி அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
ஆரோக்கியமாக ஒருவர் வாழ, பரிந்துரைக்கப்பட்ட காற்றுத் தரக் குறியீடு (AQI) 50க்கும் குறைவாக இருக்க வேண்டும். ஆனால், கடந்த சில நாட்களாக டெல்லியில் அது 400ஐத் தாண்டியுள்ளது. நுரையீரலை ஆழமாக தாக்கி உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய மைக்ரோஸ்கோபிக் PM2.5 துகள்கள் டெல்லி அரசு நிர்ணயித்துள்ள வரம்பை விட ஏழு முதல் எட்டு மடங்கு உயர்ந்துள்ளது. இது நுரையீரல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆபத்தானது எனவும், நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தையும் ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.