
மகாராஷ்டிராவில் நாசிக் நகரம் அருகே கன்டெய்னர் மீது மோதி சொகுசு பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் தூக்கத்திலேயே பயணிகள் 11 பேர்உடல் கருகி உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த கோர விபத்துக் குறித்த விவரம் வருமாறு:
மும்பையைச் சேர்ந்த சொகுசு பேருந்து(ஏசி.ஸ்லீப்பர் கோச்), யவதம்மால் மாவட்டத்தில் உள்ள புஷாத் நகரிலிருந்து மும்பைக்கு வந்தது. நாசிக் நகரம் அருகே நாசிக்- அவுரங்காபாத் சாலையில் வந்தபோது ஹோட்டர் மிர்ச்சி அருகே, இன்று காலை 5.30 மணிக்கு துலையிலிருந்து புனே சென்ற கண்டெய்னர் லாரி மீது மோதியது.
இந்திய விமானப்படையின் மைல்கல் ‘பிரசாந்த் ஹெலிகாப்டர்’: மேக் இன் இந்தியாவின் அம்சம்
கண்டெய்னர் லாரி மீது மோதிய வேகத்தில் சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்தது. இதனால் பேருந்தில் இருந்து வெளியேவர முடியாமல் பயணிகள் தவித்தனர். இதில்பலர் தூக்கத்தில் இருந்ததால், 11 பயணிகள் தூக்கத்திலேயே தீயில் கருதி உயிரிழந்தனர்.
பேருந்து தீப்பிடித்ததைப் பார்த்த மக்கள், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். 3 தீதடுப்பு படையினர் விரைந்து வந்து, தீயை அணைத்து பேருந்தில் இருந்த பயணிகளை மீட்டனர். இதில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயத்துடன் மீட்கப்பட்டு நாசிக் சிவில் மருத்துவமனைக்கும், பிற மருத்துவமனைகளுக்கும் சிகிச்சைக்காகக் கொண்டுசெல்லப்பட்டனர்.
மொபைல் & டிவிக்கு தடை போடும் அதிசய கிராமம்.. அடேங்கப்பா.!! கர்நாடகாவில் ஆச்சர்ய சம்பவம்
இந்த விபத்தை அறிந்த மாவட்ட ஆட்சியர் டி கங்காதரன் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு, மீட்டுப்பணியை விரைப்படுத்தினார். காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் மருத்துவமனைக்கு உத்தரவிட்டார்.
நாசிக் போலீஸ் ஆணையர் ஜெயந்த் நைக்நானவரே கூறுகையில் “ பேருந்தில் ஏறக்குறைய 30 பயணிகள் வரை இருந்தனர். இதில் 11 பேர் உயிரிழந்தனர், மற்றவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா முதல்வர் ஷிண்டே அறிவித்துள்ளார்.
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கான அமெரிக்கத் தூதரின் வருகையில் ஆட்சேபனை உள்ளது… மத்திய அரசு கருத்து!!
பிரதமர் மோடியும் இந்த விபத்துக்கு குறித்து கேட்டறிந்து இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ நாசிக் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50ஆயிரமும் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.