தனக்கு முன்னால் இருந்த யாராலும் சாதிக்க முடியாதவற்றைச் சாதித்துக் காட்டியவர் நரேந்திர மோடி என்று பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் ஷஷாத் சவுத்ரி புகழாரம் சூட்டியுள்ளார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த ‘தி எக்ஸ்பிரஸ் ட்ரிபியூன்’ (The Express Tribune) என்ற பிரபல ஆங்கில நாளிதழில் ‘இந்தியாவைப் பற்றி’ என்ற கட்டுரையை எழுதியுள்ள அந்நாட்டின் பிரபல எழுத்தாளர் ஷஷாத் சவுத்ரி பிரதமர் மோடியின் செயல்பாடுகளைப் பாராட்டிக் கூறியுள்ளார்.
நரேந்திர மோடி பிரதமரானதும் இந்தியாவில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியைப் பற்றிப் கூறும் அவர், “அமெரிக்கா, ரஷ்யா என்ற இரண்டு பெரிய ராணுவ பலம் கொண்ட நாடுகள் இந்தியாவை நட்பு நாடாகக் கருதுகின்றன. இது மோடியின் ராஜதந்திரப் புரட்சி அல்லாமல் வேறு என்ன...” என்று அவர் குறிப்பிடுகிறார்.
உக்ரைன் மீது போர் தொடுத்திருப்பதால் ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. ஆனால், இந்தியாதான் அமெரிக்க, ரஷ்யா ஆகிய இரு நாடுகளுடனும் வர்த்தகத் தொடர்பை சுமூகமாகப் பேணிவருகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Banavathu Tejaswee: ஆந்திர பெண் டாக்டருக்கு பிரதமர் மோடி கொடுத்த சர்ப்ரைஸ்
உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இருக்கும் இந்தியா, 2037ஆம் ஆண்டுக்குள் இன்னும் முன்னேறி உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்டதாக மாறும் என்ற கணிப்பையும் முன்வைத்துள்ளார். மேலும், உலகின் மூன்றாவது மிகப்பெரிய ராணுவத்தைக் கொண்ட நாடாகவும் உள்ள இந்தியா பல்வேறு தளங்களில் தனது கால்தடத்தைப் பதித்துள்ளது என்றும் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தனது சகோதர நாடாகக் கருதும் சவுதி அரேபியா இந்தியாவில் 72 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. ஆனால், பாகிஸ்தானில் 7 பில்லியன் டாலர் முதலீடு செய்ய யோசிக்கிறது என்பதையும் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்.
இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பு மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது 252 பில்லியன் டாலராக இருந்தது. இப்போது 600 பில்லியன் டாலரைத் தாண்டியிருக்கிறது எனக் கூறியுள்ள சவுத்ரி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 3 ட்ரில்லியன் டாலரை எட்டியுள்ளதால் உலக நாடுகள் மூதலீடு செய்வதற்கு இந்தியவைத் தேடி வரும் நிலை உருவாகியுள்ளதாகவும் எழுதியிருக்கிறார்.
Vande Bharat: புதிய வந்தே பாரத் ரயிலைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
மேலும், இந்தியாவின் அயல்நாட்டுக் கொள்கை பற்றிப் பேசும் சவுத்ரி, பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான இடைவெளி இப்போது மிகப் பெரியதாக ஆகியிருக்கிறது. தெற்காசிய நாடுகளை மட்டும் சார்ந்து இருக்காமல் இந்தியா தனது உறவுகளை விரிவுபடுத்தியுள்ளது என்கிறார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு நீக்கியது போன்ற துணிச்சலான முடிவுகளையும் எடுத்திருப்பதால் இந்திய மக்கள் படிப்படியாக முன்னேறி வருகிறார்கள் எனவும் சவுத்ரி தனது கட்டுரையில் எழுதியுள்ளார்.
டாப் டிரெண்டிங்கில் பொங்கல்: உலக தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!