
புனேவில் ஐடி ஊழியர் நயனா பூஜாரி கொலை வழக்கில் 3 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
புனேவில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நயனா பூஜாரி என்பவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மர்மமான முறையில் கொலை செய்யபட்டார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். அதில் இந்த வழக்கு தொடர்பாக 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தியது போலீஸ்.
இதையடுத்து குற்றவாளிகள் 4 பேரில் ராஜு சவுத்ரி என்பவர் அப்ரூவராக மாறினார். இதனால் இந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கபட்டார்.
மேலும் மற்ற 3 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து புனே நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிரபித்துள்ளது.
8 வருடங்களுக்கு பிறகு கிடைத்த இந்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.