ஒரே நாளில் இத்தனை பேருக்கு தொற்றா?... ‘மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துங்க’... முதல்வர் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Mar 11, 2021, 03:28 PM IST
ஒரே நாளில் இத்தனை பேருக்கு தொற்றா?... ‘மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துங்க’... முதல்வர் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

சுருக்கம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22 ஆயிரத்து 854 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. அதில் 60 சதவீதம் பேர், அதாவது 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மகராஷ்டிரா மாநிலத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22 ஆயிரத்து 854 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. அதில் 60 சதவீதம் பேர், அதாவது 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மகராஷ்டிரா மாநிலத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தபட்டுள்ளது. 

ஏற்கனவே மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜல்கோன் மாவட்டத்தில் இன்று இரவு 8 மணி முதல் திங்கட்கிழமை காலை 8 மணி வரை பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாக்பூரில் மார்ச் 15ம் தேதி முதல் 21ம் தேதி வரை பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

நாக்பூரில் அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பழங்கள், பால் கடைகள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழில் நிறுவனங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் 25% பேர் மட்டுமே பணியாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் நாக்பூரில் 1800 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளதால் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!