நிலத்தடியில் பயங்கர சத்தத்துடன் கேட்ட மர்ம ஒலி.. பீதியில் உறைந்த மக்கள்.. அதிகாரிகள் விரைவில் ஆய்வு..

Published : Jun 02, 2023, 06:40 PM ISTUpdated : Jun 02, 2023, 06:44 PM IST
நிலத்தடியில் பயங்கர சத்தத்துடன் கேட்ட மர்ம ஒலி.. பீதியில் உறைந்த மக்கள்.. அதிகாரிகள் விரைவில் ஆய்வு..

சுருக்கம்

கேரளாவில் உள்ள சிறிய குக்கிராமத்தில், நிலத்தடியில் மர்மமான ஒலி கேட்டதால், அங்கு வசிக்கும் மக்கள் பீதியடைந்தனர். 

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் சென்னப்பட்டி என்ற குக்கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் இன்று காலை நிலத்தடியில் மர்மமான ஒலி கேட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர். ஆனால் இதுபோன்று மர்மமான ஒலி கேட்பது இது முதல் முறையல்ல. சென்னப்படி கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த வார தொடக்கத்தில் மர்ம ஒலி கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

சுற்றுச்சூழலில் எந்த மாற்றமும் இல்லை என்றும், நிலத்தடி ஒலி தொடர்வதற்கான சரியான காரணத்தை அறிவியல் ஆய்வு மூலம் மட்டுமே கண்டறிய முடியும் என்றும் கிராம மக்கள் தெரிவித்தனர். கேரள சுரங்கம் மற்றும் புவியியல் துறை அதிகாரிகள், நிபுணர் குழு விரைவில் அப்பகுதியை ஆய்வு செய்யும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க : ராகுல் காந்தி வேலையில்லாமல் இருப்பதால் அப்படி அர்த்தம் இல்லை: அண்ணாமலை காட்டம்!!

இந்த வார தொடக்கத்தில் மர்ம ஒலி முதன்முதலில் கேட்டபோது அதிகாரிகள் ஏற்கனவே அந்த இடத்தை ஆய்வு செய்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று மீண்டும் இதேபோன்ற ஒலி கேட்டதாக வந்த தகவல்களின் அடிப்படையில், நிபுணர்கள் விரைவில் அந்த இடத்தை ஆய்வு செய்வார்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், புவி அறிவியல் மையம் விரிவான அறிவியல் ஆய்வை மேற்கொண்டால் மட்டுமே மீண்டும் மீண்டும் நில அதிர்வு ஒலிகளின் உண்மையான காரணத்தை கண்டறிய முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் பேசிய போது “ அத்தகைய நிகழ்வை பகுப்பாய்வு செய்வதில் எங்களுடைய சொந்த வரம்புகள் உள்ளன. எனவே, இப்பகுதியில் ஒரு தேர்வு மற்றும் ஆய்வு நடத்துவதற்கு நாங்கள் ஏற்கனவே புவி அறிவியல் மையத்திற்கு கோரிக்கையை சமர்ப்பித்துள்ளோம்” என்று தெரிவிக்கின்றனர். எனவே, புவியியல் துறை வல்லுநர்கள், அந்தப் பகுதியை மீண்டும் ஆய்வு செய்து, இது தொடர்பான விவரங்களை ஆய்வு செய்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : ” மோடி தான் அதை தொடங்கினார், ராகுல்காந்தி இல்லை” பாஜகவின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் எம்.பி சசிதரூர் பதில்

PREV
click me!

Recommended Stories

EPFO சம்பள வரம்பு உயர்வால் கைக்கு வரும் சம்பளம் குறையுமா? ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முழு விவரம்!
Longest Train Journeys In India: 3 பகல், 3 இரவு... இந்தியாவையே கடக்கும் ரயில் பயணம்! 75 மணி நேரம் தொடரும் பிரம்மாண்ட Train Travel.!