எம்.ஏ.வரலாறு தேர்வில் முத் தலாக், அலாவுதீன் கில்ஜி, குறித்து கேள்வி? - பனாராஸ் இந்து பல்கலையில் மீண்டும் சர்ச்சை

Asianet News Tamil  
Published : Dec 10, 2017, 07:48 PM ISTUpdated : Sep 19, 2018, 01:35 AM IST
எம்.ஏ.வரலாறு தேர்வில் முத் தலாக், அலாவுதீன் கில்ஜி, குறித்து கேள்வி? - பனாராஸ் இந்து பல்கலையில் மீண்டும் சர்ச்சை

சுருக்கம்

Muttalak Alauddin Khilji Padmavathi questioning has again raised controversy.

வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற பனாராஸ் இந்து பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. வரலாறு பிரிவில் நடந்த தேர்வில் முத்தலாக், அலாவுதீன் கில்ஜி, பத்மாவதி குறித்து கேள்விகள் கேட்பட்டது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சை

ஏற்கனவே அரசியல் அறிவியல் பாடப்பிரிவு மாணவர்களுக்கு சாணக்கியர் காலத்தில் ஜி.எஸ்.டி. வரி எப்படி இருந்தது?, உலக மயமாக்கலை பற்றி சந்தித்தது மனுதர்மம் எழுதிய முனிவர் மனுவா? என்று கேட்கப்பட்ட கேள்விகளால் சர்ச்சை உருவானது. இப்போது வரலாறு பாடத்துக்கு இப்படி கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

எம்.ஏ. வரலாறு

வாரணாசியில் புகழ்பெற்ற பல்கலைக்கழகம் பனாராஸ் இந்து பல்கலைக்கழகம். இங்கு முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு தேர்வுகள் நடந்து வருகின்றன. முதுகலை வரலாறு பிரிவு மாணவர்களுக்கு முதல்நிலை பருவத் தேர்வுகள் நடந்து வருகின்றன.

இதில் வரலாறு பிரிவு மாணவர்களுக்கு முத் தலாக், ஹலால், அலாவுதீன் கில்ஜி குறித்து கேள்விகள் கேட்கப்பட்டதால் மாணவர்கள் குழப்பமடைந்தனர். 

கேள்விகள்

முஸ்லிம் மதத்தில் ஹலால் என்றால் என்ன?, அலாவுதீன் கில்ஜி காலத்தில் கோதுமைக்கு விலை நிர்ணயிக்கப்பட்டது எப்படி?, முஸ்லிம் மதத்தில் முத்தலாக் மற்றும் ஹலால் போன்ற சமூகக் கொடுமைகள் குறித்து எழுதுக? என்று கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன.

ஒரு குறிப்பிட்ட மத சிந்தனையை மாணவர்கள் மனதில் புகுத்த பல்கலைக்கழக நிர்வாகம் முயற்சிக்கிறது என்று மாணவர்கள் தரப்பில் இந்த கேள்வித்தாள் குறித்து புகார் கூறப்பட்டது.

எதிர்ப்பு

பல்கலைக்கழகத்தில் வரலாறு படிக்கும் மாணவர் விகாஸ் கூறுகையில், “ வரலாறு பாடத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்து ஒன்றும் தவறு இல்லை என பல்கலைக்கழகம் கூறுகிறது. இது போன்ற கேள்விகள் தவறானவை. மாணவர்களை பிரித்தாளும் முயற்சியில் இந்த கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன’’ எனத் தெரிவித்தார்.

பேராசிரியர் ஆதரவு

ஆனால், மாணவர்கள் கருத்து மாறுபட்டு, பல்கலைக்கழகத்தின் வரலாற்றுதுறை துணை பேராசிரியர் ராஜீவ் ஸ்ரீவஸ்தவா கருத்துக் கூறுகிறார் அவர் கூறுகையில், “ மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்காமல் இருந்திருந்தால், எப்படி இதுபோன்ற கேள்விகளை கேட்க முடியும். இடைக்கால இந்தியா குறித்து கற்றுக்கொடுக்கும் போது, இதுபோன்ற விஷயங்கள் அதில் இடம் பெறும். வரலாறு திரிக்கப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற விஷயங்களை கற்றுக்கொடுப்பதன் மூலம் உண்மையான வரலாற்றை அறிந்து கொள்ள முடியும்.

பன்சாலிக்கு எதிர்ப்பு

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை, அலிகார் முஸ்லிம் பல்கலை ஆகியவற்றில் நடக்கப்படும் தேர்வில் முஸ்லிம் மதத்தின் குறைபாடுள் குறித்து கேள்விகள் கேட்கப்பட வேண்டும்.

முஸ்லிம்  குறித்து கற்பிக்கும்போது, இதுபோன்ற விஷயங்களையும் கற்பிப்போம். சஞ்சய் லீலா பன்சாலி போன்றவர்கள் மாணவர்களுக்கு வரலாறு குறித்து மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டாம் ’’ என்றார்.

PREV
click me!

Recommended Stories

மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை..! புதிய அரசால் ரத்தக் களறியாக மாறிய போராட்டம்..!
நாங்கள் பிரதமர் மோடியை தாக்க திட்டமிட்டோமா?.. சபாநாயகர் புகாரால் கொந்தளித்த ஜோதிமணி.. பரபரப்பு விளக்கம்!