8 நாள் பச்சிளங்குழந்தையை கழுத்தை நெறித்து கொன்ற தாய் - ஏன் தெரியுமா?

Asianet News Tamil  
Published : Dec 10, 2017, 06:55 PM ISTUpdated : Sep 19, 2018, 01:35 AM IST
8 நாள் பச்சிளங்குழந்தையை கழுத்தை நெறித்து கொன்ற தாய் - ஏன் தெரியுமா?

சுருக்கம்

An 8-year-old mother killed by a stomach

தன்னைப் போல் நிறமும், கணவரின் முகச்சாயலும் இல்லை எனக் கூறி பிறந்து 8 நாளே ஆன பச்சிளங்குழந்தையை கழுத்தை நெறித்து கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், கட்டப்பனா அருகே முரிக்காட்டுக்குடி பகுதியைச் சேர்ந்தவர் முரிகாட்டுக்குடி கண்டந்திங்கரா பினு. இவரின் மனைவி சந்தியா(வயது28). இவருக்கு கடந்த 9 நாட்களுக்கு முன் குழந்தை பிறந்து இருந்தது.

இந்நிலையில், தனக்கு பிறந்த குழந்தையின் நிறம் தன்னைப் போல் இல்லை, கணவரின் முகத்தோற்றத்திலும் இல்லை எனக்க கூறி சந்தியா,அந்த பச்சிளங்குழந்தையின் கழுத்தை துண்டால் இருக்கி சனிக்கிழமை கொலை செய்தார்.

வௌியே சென்று வீட்டு வந்த கணவரிடம் குழந்தை அசைவற்று கிடப்பதாக சந்தியா கூறி நாடகமாடினார். இதையடுத்து குழந்தையை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சந்தியாவும், பினுவும் கொண்டு சென்றனர்.

குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர், குழந்தையின் கழுத்தில் காயம் இருப்பதைப் பார்த்து சந்தேகப்பட்டார். சந்தியாவிடம் விசாரணை செய்ததில் அவர் முரணாக பதில அளித்தார். இதையடுத்து, டாக்டர் புகாரின் பெயரில் போலீசார் வரவழைக்கப்பட்டு சந்தியாவிடம் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் குழந்தையை துண்டால் இறுக்கி கொலை செய்ததாக சந்தியா ஒப்புக்கொண்டார். விசாரணையில் தன்னுடைய நிறமும், கணவரின் முகத்தோற்றத்திலும் குழந்தை இல்லை என்பதால், கொலை செய்தேன் என சந்தியா விசாரணையில் தெரிவித்தார். இதையடுத்து, சந்தியாவை போலீசார் கைது செய்தனர்.

சந்தியாவுக்கு 9 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது. பெற்றதாயை பச்சிளங்குழந்தையை கொலை செய்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

PREV
click me!

Recommended Stories

மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை..! புதிய அரசால் ரத்தக் களறியாக மாறிய போராட்டம்..!
நாங்கள் பிரதமர் மோடியை தாக்க திட்டமிட்டோமா?.. சபாநாயகர் புகாரால் கொந்தளித்த ஜோதிமணி.. பரபரப்பு விளக்கம்!