ஏழை இந்து பெண்ணின் திருமணத்தை நடத்திவைத்த இஸ்லாமியர்கள்..! இதுதான்டா இந்தியா..!

Asianet News Tamil  
Published : Nov 28, 2017, 03:21 PM ISTUpdated : Sep 19, 2018, 01:30 AM IST
ஏழை இந்து பெண்ணின் திருமணத்தை நடத்திவைத்த இஸ்லாமியர்கள்..! இதுதான்டா இந்தியா..!

சுருக்கம்

muslims organise funds for poor hindu woman marriage

மேற்குவங்க மாநிலத்தில் இஸ்லாமியர்கள் பணம் திரட்டி ஏழை இந்து பெண்ணின் திருமணத்தை நடத்தி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாதி, மதம் ஆகியவற்றைப் பயன்படுத்தி வாக்கு வங்கி அரசியல் நடத்தப்பட்டு வருகிறது. அரசியல் ஆதாயங்களுக்காக அவ்வப்போது ஆங்காங்கே மதக்கலவரமோ சாதி மோதலோ நடைபெற்றுவருகிறது. ஆனால், உண்மையாகவே சாதி, மதங்களைக் கடந்து மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்துவருகின்றனர் என்பதை நிரூபிக்கும் வகையிலான சம்பவங்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

அப்படியான ஒரு சம்பவம்தான் மேற்குவங்கத்தில் நடைபெற்றுள்ளது. மேற்குவங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள கிராமம் கான்பூர். இந்த கிராமத்தில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையுடன் வசித்துவருகின்றனர்.

மொதியூர் ரஹ்மான் என்பவர் இந்த கிராமத்தின் தலைவராக உள்ளார். இந்த கிராமத்தில், திரிஜிலால் சௌத்ரி என்பவரது குடும்பம் வசித்துவருகிறது. திரிஜிலால் சௌத்ரி-சொவராணி தம்பதிக்கு 5 மகள்கள் மற்றும் ஒரு மகன். சௌத்ரி கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னதாக உயிரிழந்துவிட்டார். இதையடுத்து 5 மகள்கள் மற்றும் ஒரு மகனை வளர்ப்பதற்கு மிகவும் சிரமப்பட்டுள்ளார் தாய் சொவராணி.

ஆனால், அந்த குடும்பத்திற்கு கிராம தலைவரான ரஹ்மான் உதவி செய்துவந்திருக்கிறார். இந்நிலையில், சொவராணியின் மகள், சரஸ்வதிக்கும் தபன் சௌத்ரி என்பவருக்கும் திருமண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாப்பிள்ளை வீட்டில், 2000 ரூபாய் வரதட்சணையாக கேட்டுள்ளனர்.

மிகவும் சிரமத்தில் இருந்த சொவராணி, வரதட்சணைக்கு 2000 ரூபாயை திரட்டிவிட்டார். ஆனால், திருமண செலவிற்கு பணமில்லை. இந்த தகவலை அறிந்த கிராமத்தின் தலைவர் ரஹ்மான், தனது உறவினர்களான அப்துல் பாரி, இமாதுல் ரஹ்மான், ஜலாலுதீன், சஹிதுல் இஸ்லாம் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தியுள்ளார். இதையடுத்து ரஹ்மான் மற்றும் அவரது உறவினர்கள் பண உதவி அளித்து, சரஸ்வதியின் திருமணத்தை நடத்தி முடித்துள்ளனர்.

கடந்த 25-ம் தேதி நடைபெற்ற அந்த திருமணத்திற்கு வந்தவர்களை வரவேற்றது முதல், முன்னிலையில் நின்று நடத்தி முடித்தது, ரஹ்மான் தான்.

சரஸ்வதி தனது மகளைப் போன்றவர் என்றும், அவரது தந்தையின் இடத்தில் இருந்து நல்ல காரியத்தை சிறப்புடன் செய்து முடித்ததாக மொதியுர் ரஹமான் கூறியுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

ஒரே நேரத்துல ரெண்டு குறி! 2025 கடைசி நாளில் பிரளய் ஏவுகணையை ஏவி அதிரடி காட்டிய இந்தியா!
குடியரசு தின விழாவில் ராஜபாளையம் நாய்! முதல் முறையாக ராணுவத்தின் கால்நடை அணிவகுப்பு!