மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் ஹிஜாப் விவகாரம்.. கேரளாவில் கிளர்த்தெழுந்த போராட்டம்..

Published : Sep 26, 2022, 04:13 PM IST
மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் ஹிஜாப் விவகாரம்.. கேரளாவில் கிளர்த்தெழுந்த போராட்டம்..

சுருக்கம்

கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவி ஹிஜாப் அணிந்து வந்ததால், வகுப்பிற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தை கண்டித்து முஸ்லிம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   

கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவி ஹிஜாப் அணிந்து வந்ததால், வகுப்பிற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தை கண்டித்து முஸ்லிம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுக்குறித்து பள்ளி நிர்வாகம் தரப்பில்,”ஹிஜாப் விவகாரம் குறித்து நாங்கள் மாணவி மற்றும் அவரது பெற்றோரிடம் தெரிவித்துவிட்டோம். பள்ளி நிர்வாகம் அதன் நிலைப்பாட்டில் இருந்து மாறாது என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.இதனால் மாணவின் பெற்றோர் அவரது படிப்பை சம்பந்தபட்ட பள்ளியிலிருந்து நிறுத்தியுள்ளனர். இதனை கண்டித்து தற்போது பள்ளியின் முன் முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்த ஏராளமானர் ஒன்று திரண்டு போராடி வருகின்றனர்.kerala hijab protest

மேலும் படிக்க:ரூ.200 கோடி பண மோசடி வழக்கு... நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி கோர்ட்

அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான நடவடிக்கையில் பள்ளி ஈடுபட்டுள்ளதால் அதன் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் முஸ்லிம் மாணவர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.பள்ளியின் முன் கூடியிருக்கும் போராட்டக்காரர்களை தடுப்புகளை அமைத்து கலைக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஈரான் நாட்டில் ஹிஜாப் முறையாக அணியாததாக கூறி, 22 வயது இளம் பெண் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த மரணத்திற்கு எதிராக நீதிகேட்டும் அரசின் அடக்குமுறை சட்டங்களுக்கு எதிராகவும் ஈரான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பெண்கள் ஹிஜாப்பை எரித்து, நூதன போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க:ghulam nabi azad party: புதிய கட்சியின் பெயரை அறிவித்தார் குலாம் நபி ஆசாத்: விரைவில் ஜம்மு காஷ்மீர் தேர்தல்

இந்நிலையில் கேரளாவில் தற்போது ஹிஜாப் விவகாரம் தொடர்பாக போராட்டம் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

மலை போல் குவிந்த எஸ்.ஐ.ஆர். வழக்குகள்.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருத்தப்பட்ட வந்தே மாதரம் தான் தேசப் பிரிவினைக்கு காரணமா? அமித் ஷா பேச்சால் சர்ச்சை