டெல்லியில் 12 வயது சிறுவனை 4பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்து, அவனின் அந்தரங்க உறுப்புக்குள் இரும்பு கம்பியை நுழைத்த மனிதநேயமற்ற சம்பவம் நடந்துள்ளது.
டெல்லியில் 12 வயது சிறுவனை 4பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்து, அவனின் அந்தரங்க உறுப்புக்குள் இரும்பு கம்பியை நுழைத்த மனிதநேயமற்ற சம்பவம் நடந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் அந்த சிறுவனுக்கு உயிர்போகும் அளவுக்கு அடித்து உதைத்து சாலையில் கிடத்திவிட்டு கும்பல் தப்பியதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜீவ் கொலை வழக்கு: நளினி மனுவுக்கு பதில் அளி்க்க மத்திய அரசு, தமிழக அரசுக்கு நோட்டீஸ்
நிர்பயாவுக்கு நடந்ததைப் போன்ற கொடூரம் யாருக்கும் தொடரக்கூடாது என்று எண்ணிவரும் நிலையில் 12 வயது சிறுவனுக்கு நடந்துள்ளது. தற்போது அந்த சிறுவன் மிகவும் மோசமான நிலையிலும், படுகாயங்களுடனும் சிகிச்சை பெற்று வருகிறான். இந்த வழக்கில் டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
குழந்தைகளுக்கு பாலியல் சீண்டல், வன்முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், அவர்களை துணிச்சலா புகார் கூற வைப்பதும் இந்தநேரத்தில் முக்கியமானதாக அமைந்துள்ளது. இதுபோன்ற கொடுமையிலிருந்து குழந்தைகளைக் காக்க பெற்றோரும், பாதுகாவலர்களும் ஒவ்வொரு நடவடிக்கையை எடுப்பது அவசியம்.
மயங்கி விழாதிங்க!திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் சொத்து மதிப்பு என்ன? வெளியானது உண்மை தகவல்
விபத்துகளில் இருந்து தப்பிக்க சாலையை எவ்வாறு கடப்பது, குழந்தைகளை அந்நியர்ஒருவர் தொடும்போது, “குட் டச் மற்றும் பேட் டச்” குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்.
தேசிய குற்ற ஆவணக் காப்பகம்(என்சிஆர்பி) அறிக்கையின்படி,ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் 4.5 சதவீதம் அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
பாலியல் சீண்டலில்இருந்து குழந்தைகளை எவ்வாறு காப்பது:
உடல்உறுப்புகளைக் கற்றுக்கொடுப்பது:
குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் குறித்தும், அதன் பெயர் குறித்தும் முறையாக பெற்றோர் குறிப்பாக தாய் கற்றுக்கொடுப்பது அவசியம். அப்போதுதான் முறையற்ற சம்பவங்கள் ஏதேனும் நடந்தால் அதுகுறித்து குழந்தைகள் பெற்றோரிடம் தெரிவிக்க இயலும்.
இந்தியாவின் குரல் உலகளவில் கவனிக்கப்பட பிரதமர் மோடியே காரணம்! மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்
அந்தரங்க உறுப்புகள் குறித்து குழந்தைகளிடம் தெரிவிப்பது:
எந்தவிதமான தயக்கமும் இன்றி, குழந்தைகளிடம் அந்தரங்க உறுப்பு பற்றி பெற்றோர் பேச வேண்டும். அந்தரங்க உறுப்பை ஏன் மறைக்க வேண்டும், அதன் அவசியம் என்ன, ஏன் அனைவரும் பார்க்கக் கூடாது என்பதை விளக்கவேண்டும். குறிப்பாக தன்னுடைய உடலை யாரும் பார்க்ககூடாத வகையில் மறைப்பதை கற்றுக்கொடுக்க வேண்டும்
குட் டச்-பேட் டச் குறித்துவிளக்கம்
குழந்தைகளின் அந்நியர்கள் தொடுதலில் பாலியல் ரீதியான சீண்டல் அல்லது பாலியல்ரீதியாக அல்லாத சீண்டல் குறித்து தெளிவாக பெற்றோர் விளக்கவேண்டும். குழந்தைகள் அந்நியர் தொடுதலில் உள்ள வரையரைகள், எல்லை குறித்து தெரிந்திருக்க வேண்டும். தன்னுடைய உடலை யாரும் தொடக்கூடாது என்பதையும், எதையும் வலுக்கட்டாயமாக பார்க்க கூடாது என்பதையும் தெரிவிக்க வேண்டும்.
மறுக்கக் கற்றுக்கொடுங்கள்:
குழந்தைகளுக்கு மறுத்தலைக் கற்றுக்கொடுங்கள்.
அதாவது, தவறானவற்றை பார்க்க வற்புறுத்தும்போது அதற்கு மறுப்பு கூற கற்றுக்கொடுக்க வேண்டும். பெற்றோரின் அனுமதியின்றி குழந்தைகளின் படங்களை யாரிடமும் வழங்கக்கூடாது என்பதை கூறுங்கள்
குழப்பமான சூழலில் எவ்வாறுநடப்பது:
பதின்வயது மாணவர்கள், சிறுவர்கள் மத்தியி்ல் குழந்தைகள் வரும்போது, ஒருவிதமான அசவுகரியான சூழலை எதிர்கொள்வார்கள். அப்போது அந்த சூழலை எவ்வாறு எதிர்கொள்வது, அதை கடந்து எவ்வாறு வருவது, குழப்பமின்றி எவ்வாறு கடப்பதை கற்றுக்கொடுங்கள்
குழந்தைகளை நம்புங்கள்
உங்கள் குழந்தைகளை முதலில் நம்புங்கள். அவர்கள் கூறுவதை காது கொடுத்து கேளுங்கள். குறிப்பிட்ட ஒருவரிடம் குழந்தை அசவுகரியாக இருந்ததாகக் கூறினார், அல்லது பேட் டச் இருப்பதாக கூறினால் உதாசீனப்படுத்தாமல், அதை மறைக்க முயலாமல் நடவடிக்கைஎடுங்கள்.