ரயில்நிலையங்களில் உள்ள உணவு தயாரிப்பு நிறுவனங்களில் உணவு பொருட்களை கொள்முதல் செய்வதற்கு, மின்னணு பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவதற்கான புதிய வசதிகளை இந்திய ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.
ரயில்நிலையங்களில் உள்ள உணவு தயாரிப்பு நிறுவனங்களில் உணவு பொருட்களை கொள்முதல் செய்வதற்கு, மின்னணு பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவதற்கான புதிய வசதிகளை இந்திய ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,”நாடு முழுவதும் 8,878 இடங்களில் டிஜிட்டல் பேமண்ட் செய்யும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி உணவுகளின் விலையை அச்சிட்டு அளிப்பதற்கு, 596 ரயில்களில் 3,081 கையடக்க விற்பனை பதிவு பிஓஎஸ் எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதை தவிர 4,316 நிலையான உணவு தயாரிப்பு நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க:பரபரப்பு !! சுற்றுலா வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து 3 ஐஐடி மாணவர்கள் உட்பட 7 பேர் பலி..
இதன் மூலம் பரிவர்த்தனைகளின் அனைத்து விவரங்களும் அடங்கிய ரசீதுகள் கொடுக்கப்படும். இதனால் அதிக கட்டணம் வசூலிக்கும் புகார்கள் சரிசெய்யப்படும்.அதே போல் இந்திய ரயில்வே இ - கேட்ரிங் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பயணிகள் இ-டிக்கெட் மூலம் பயணச்சீட்டை முன் பதிவு செய்யும் போதே, அவர்களுக்கு தேவையான உணவு வகைகளையும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
அதுமட்டுமின்றி சேவை மையம், இணையதளம் வசதி அல்லது 1323 என்ற எண் மூலம் தொடர்பு கொண்டு உணவுகளை முன்பதிவு செய்யலாம். முதற்கட்டமாக இ-கேட்ரிங் சேவை 310 ரயில் நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் 14 உணவு நிறுவனங்கள் மற்றும் 1,755 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சராசரியாக நாள் ஒன்றுக்கு 41,844 உணவு வகைகள் வழங்கப்படுகின்றன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இ-கேட்ரிங் சேவைகளை இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன்(ஐஆர்சிடிசி) மூலம் நிர்வகிக்கப்படுகிறது.
மேலும் படிக்க:rajiv death case:ராஜீவ் கொலை வழக்கு: நளினி மனுவுக்கு பதில் அளி்க்க மத்திய அரசு, தமிழக அரசுக்கு நோட்டீஸ்