இந்திய குடியரசுத் தலைவராக பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு வெற்றி பெற்றிருப்பது பாஜகவுக்கு பல்வேறு வகையில் அனுகூலமாக அமையும் என்றும், எதிர்காலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அது பாஜகவுக்கு சாதகமாக அமையும் என்றும் விவரமறிந்தவர்கள் கணிக்கின்றனர்.
இந்திய குடியரசுத் தலைவராக பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு வெற்றி பெற்றிருப்பது பாஜகவுக்கு பல்வேறு வகையில் அனுகூலமாக அமையும் என்றும், எதிர்காலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அது பாஜகவுக்கு சாதகமாக அமையும் என்றும் விவரமறிந்தவர்கள் கணிக்கின்றனர். அது எப்படி என்பதை விவரமாக காணலாம்:-
பாஜக ஒரு செயலை செய்கிறது என்றால் அதற்குப்பின்னால் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும் என்றே கூறலாம். எந்த ஒரு செயலையும் திட்டமிட்டு பல கோணங்களில் ஆராய்ந்து செய்வதில் பாஜக தலைவர்கள் வல்லவர்கள், அந்த வகையில்தான் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த முர்மு குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தி அதில் வெற்றி கண்டுள்ளனர். இதற்குப் பின்னால் வலுவான வாக்கு வங்கி அரசியல் மறைந்திருக்கிறது என்பதை எளிதில் புறந்தள்ளிவிட முடியாது.
பாஜக களமிறக்கிய வேட்பாளர் திரௌபதி முர்மு எதிர்க் கட்சி வேட்பாளரை காட்டிலும் அதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளார் இந்நிலையில் அவருக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர், இந்தியா சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் குடியரசுத் தலைவராவது இதுவே முதல் முறையாகும்.
இதையும் படியுங்கள்: அடுத்த தேர்தல் என் மகன் போட்டியிடுவார்… அவருக்கும் ஆதரவளியுங்கள்… எடியூரப்பா அதிரடி அறிவிப்பு!!
இதற்கு முன்பிருந்தவர்களை காட்டிலும் (64 வயது) இளம் வயதில் குடியரசு தலைவர் ஆனவர் இவரே ஆவார். முர்முவின் வெற்றி அரசியல் தாக்கங்களையும் சமூக தாக்கங்களையும் ஏற்படுத்தக்கூடியது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, முர்மு அடிப்படையில் பழங்குடியின சமூகத்தைச் சார்ந்தவர், அவர் குடியரசு தலைவர் ஆகும் பட்சத்தில் அது பழங்குடியினர் சமூக மக்கள் மத்தியில் பாஜகவின் மீது நன்மதிப்பை உயர்த்துவதற்கு இது சிறந்த வாய்ப்பாகவே கருதப்படுகிறது.
இதையும் படியுங்கள்: draupadi murmu: ஜனாதிபதி தேர்தல்: வெற்றி பெற்ற திரெளபதி முர்மு-வுக்கு சான்றிதழ் வழங்கியது தேர்தல் ஆணையம்
இந்த ஆண்டு குஜராத் மற்றும் ஹிமாச்சல் பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது, இந்த இரு மாநிலங்களும் பழங்குடியினர் சமூகத்தினர் கணிசமாக வாழும் மாநிலங்கள் ஆகும், குஜராத்தின் மொத்த மக்கள்தொகையில் 14.8 சதவீதம் பேர் பழங்குடியின சமூகத்தினர் ஆவர், இமாச்சல் பிரதேசத்தில் மொத்த மக்கள்தொகையில் 5.75 சதவீதம் பேர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த மாநிலங்களில் எந்த தேர்தலாக இருந்தாலும் அதன் வெற்றி தேல்வியை நிர்ணயிப்பவர்களாக பழங்குடியினர் இருந்து வருகின்றனர்.
தற்போது முர்மு குடியரசுத் தலைவர் ஆகியிருக்கும் நிலையில் அவர்கள் பாஜகவுக்கு தங்களது ஆதரவை அளிக்க வாய்ப்பு இருக்கிறது, முர்முவின் வெற்றி இந்த இரு மாநில தேர்தல்களிலும் எதிரொலிக்கும் என்று அரசியல் வல்லுனர்கள் கணிக்கின்றனர். இந்த இரு மாநிலங்கள் மட்டுமின்றி 2023 மற்றும் 2024-ல் இன்னும் பல மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் முர்முவின் வெற்றி எதிரொலிக்கும் என கணிக்கப்படுகிறது. இதேபோல் அடுத்த ஆண்டு 2023 மேகாலயா, நாகலாந்து, திரிபுரா, கர்நாடகா, சதீஷ்கர், மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா உள்ளிட்ட 9 மாநில தேர்தல் நடைபெற உள்ளது.
அத்தேர்தலில் பழங்குடியினர் சமூக மக்கள் அடர்த்தியாகவே வாழ்கின்றனர். ஒவ்வொரு மாநிலத்திலும் மக்கள்தொகையில் 20 சதவீதத்திற்கு மேல் பழங்குடியினர் இருந்து வருகின்றனர்.
1.மேகாலயாவில்86.15%
2.நாகலாந்தில் 86.5%
3.திரிபுராவில் 31.8%
4.சத்தீஸ்கரில் 30.6%
5.மத்திய பிரதேசத்தில் 21.1%
6.மிசோரமில் 94.4%
7. ராஜஸ்தானில் 13.5%
8.தெலுங்கானாவில் 9.3%
9% கர்நாடகாவில் 7 சதவீதம் பேர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.
ஏற்கனவே பிரதமர் மோடி அந்தோதியா திட்டம் குறித்து நாடு முழுவதும் பேசி வருகிறார், அந்தோதியா என்பது கடைகோடியில் இருப்பவர்களையும் பொது நீரோட்டத்தில் இணைப்பதுதான், இச்சூழலில்தான் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு குடியரசுத் தலைவராகி இருக்கிறார். மோடி அரசின் மீது ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசின் மீது மக்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் முர்முவின் வெற்றி அமையும் என கூறப்படுகிறது.
இதேபோல் தொடர்ந்து பாஜக தலைவர்கள் குடும்ப அரசியல், வாரிசு அரசியலுக்கு எதிராக மேடைதோறும் பேசி வருகின்றனர். அந்த வரிசையில் அரசியல் பின்புலம் இன்றி, குடும்ப பின்புலமின்றி உயர்ந்தவர் முர்மு என்பதை மேடைதோறும் பேசுவதற்கு இது வாய்ப்பாக அமையும், மொத்தத்தில் குடும்ப வாரிசு அரசியலை மூர்க்கமாக பாஜக எதிர்ப்பதற்கும், பேசுவதற்கும் இதை பாஜக துருப்பு சீட்டாக பயன்படுத்தும். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தும் இந்த அடிப்படையிலேயே முன்மொழியப்பட்டார்,
மேலும், தலைவர் ராம்நாத் கோவிந்த் அதிக எண்ணிக்கையிலான மக்களவைத் தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டார், இதனடிப்படையில் பாஜகவின் தேர்தல் வியூகம் என்ன என்பதை புரிந்துகொள்ளமுடியும், இதேபோல் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர், தற்போது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள முர்மு ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர், துணை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்பட்ட ஜக்தீப் தன்கர் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நான்கு மாநிலங்களும் பாஜகவின் தேர்தல் வியாகத்தில் உள்ள மாநிலங்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.