தொழிலதிபரும், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவரான முகேஷ் அம்பானி, அவரின் மனைவி நீடா அம்பானி மற்றும் குடும்பத்தாருக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு தொடர்ந்து வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் இன்று அனுமதியளித்துள்ளது
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவரான முகேஷ் அம்பானி, அவரின் மனைவி நீடா அம்பானி மற்றும் குடும்பத்தாருக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு தொடர்ந்து வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் இன்று அனுமதியளித்துள்ளது
தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு கடந்த 2013ம் ஆண்டிலிருந்தும், அவரின் மனைவி மற்றும் குடும்பத்தாருக்கு 2016ம் ஆண்டிலிருந்தும் மத்திய அரசு சார்பில் ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பாதுகாப்புக்கான செலவை முகேஷ் அம்பானி வழங்கி வருகிறார்.
4 கோடி பேர் இன்னும் ஒரு தடுப்பூசிகூட போடவில்லை: மத்திய அரசு தகவல்
இந்நிலையில் திரிபுரா உயர் நீதிமன்றத்தில், பிகாஷ் சஹா என்பவர் பொது நலன் மனுத் தாக்கல் செய்தார். அதில், தொழிலதிபர் முகேஷ் அம்பானி, அவரின் குடும்பத்தாருக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, திரிபுரா உயர் நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், பர்திவாலா பிறப்பித்த உத்தரவில், “ முகேஷ் அம்பானி அவரின் குடும்பத்தாருக்கு என்ன அச்சறுத்தல், ஏன் பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்பது குறித்த விரிவான அறிக்கையை ஜூன் 28ம் தேதிக்குள், மத்தியஉள்துறை அமைச்சக அதிகாரி, தாக்கல் செய்ய வேண்டும். நேரிலும் ஆஜராக வேண்டும்” எனத் தெரிவித்தது.
தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்? எவ்வாறு மூவர்ணக் கொடி உருவானது?
இதையடுத்து, மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு விடுப்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், “ முகேஷ் அம்பானிக்கு பாதுகாப்பு அளிப்பது மத்திய அரசு, இதில் மாநில அரசு தலையிடுவதற்கு வழியில்லை. மகாராஷ்டிரா அரசின் பரிந்துரையின் அடிப்படையில்தான் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
மத்திய அரசு பாதுகாப்பு விஷயத்தில் திரிபுரா நீதிமன்றம் தலையிட முடியாது” எனத் தெரிவித்தது.
இதையடுத்து, கடந்த மாதம் 29ம் தேதி திரிபுரா உயர் நீதிமன்றம் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில் மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதிடினார்,
அவர் கூறுகையில் “ முகேஷ் அம்பானி, அவரின் குடும்பத்தாருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு மகாராஷ்டிரா அரசின் பரிந்துரையின்படி மத்திய அரசு வழங்குகிறது. அதற்கான செலவை முகேஷ் அம்பானி வழங்குகிறார். இந்த விஷயத்தில் தனிநபர் ஒருவர் தலையிட உரிமையில்லை” எனத் தெரிவித்தார்
முகேஷ் அம்பானி சார்பில் ஆஜராகிய மூத்த வழக்கறிஞர் ஹரிஸ் சால்வே, “ இதுபோன்ற மனுவை திரிபுரா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது துரதிர்ஷ்டம்” எனத் தெரிவித்தார்
சுதந்திர தினத்தின்போது வீடுகளில் தேசியக் கொடி ஏற்றுங்கள்: மக்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்
இந்நிலையில் இந்த மனு மீது தலைமை நீதிபதி என்வி ரமணா, நீதிபதிகள் கிருஷ்ணா முராரி, ஹிமா கோலி ஆகியோர் அமர்வு இன்று உத்தரவு பிறப்பித்தது. இதில் தலைமை நீதிபதி என்வி ரமணா மனுதாரர் வழக்கறிஞடம், “ உங்களின் நோக்கம் என்ன, அம்பானி பாதுகாப்பை பற்றி ஏன் நீங்கள் கவலைப்படுகிறீர்கள். மத்திய அ ரசு இருக்கிறது, அவர்கள் கவனிப்பார்கள். இது ஒருவரின் பாதுகாப்பு தொடர்பானது. ஆதலால், முகேஷ் அம்பானி, அவரின் மனைவி நீட்டா அம்பானி, குடும்பத்தாருக்கு தொடர்ந்து பாதுகாப்பு வழங்கலாம்” என உத்தரிவிட்டார்