vaccine: 4 கோடி பேர் இன்னும் ஒரு தடுப்பூசிகூட போடவில்லை: மத்திய அரசு தகவல்

By Pothy Raj  |  First Published Jul 22, 2022, 4:28 PM IST

இந்தியாவில் இன்னும் 4 கோடி மக்கள் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசிகூட செலுத்திக்கொள்ளவில்லை என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.


இந்தியாவில் இன்னும் 4 கோடி மக்கள் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசிகூட செலுத்திக்கொள்ளவில்லை என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசு கொண்டு வந்தது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், முன்களப்பணியாளர்கள், மருத்துவ, சுகாதாரப்பணியாளர்களுக்குத் தொடங்கி 12 வயதுவரையிலான பிரிவினர் வரைதடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இரு டோஸ் தடுப்பூசி தவிர, கூடுதலாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் மக்களுக்கு அரசு செலுத்தி வருகிறது.

Tap to resize

Latest Videos

ஜனாதிபதி தேர்தல்: வெற்றி பெற்ற திரெளபதி முர்மு-வுக்கு சான்றிதழ் வழங்கியது தேர்தல் ஆணையம்

கொரோனா பரவலைத் தடுக்கும்வகையில் 15ம் தேதி முதல் 75 நாட்கள் சிறப்பு தடுப்பூசி முகாம்களை நாடுமுழுவதும் நடத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன்படி 18 வயது முதல் 59வயதுள்ள அனைவருக்கும் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

18முதல் 59 வயதுவரை உள்ளவர்களில் முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி செவ்வாய்கிழமை வரை 1.15 கோடி பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. 12 முதல் 14 வயதுள்ள குழந்தைகளுக்கு 3.56 கோடி குழந்தைகளுக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 15 முதல் 18வயதுள்ள பிரிவில் 6 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்? எவ்வாறு மூவர்ணக் கொடி உருவானது?

இதுவரை நாட்டில் 200 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை 4 கோடி பேர் எந்தவிதமான தடுப்பூசியும் செலுத்தாமல் இருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில், மத்திய சுகாதாரத்துறை இணைஅமைச்சர் பாரதி பிரவி்ன் பவார் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் “ ஜூலை 18ம் தேதிவரை 97.34 சதவீதம் அதாவது, 178 கோடியே 38 லட்சத்து 52 ஆயிரத்து 566 டோஸ்கள் இலவசமாக அரசு தடுப்பூசி மையங்களில்  செலுத்தப்பட்டுள்ளன. 

மிரட்டும் கொரோனா.. 22 ஆயிரத்தை நெருங்கும் ஒரு நாள் பாதிப்பு.. இன்று மட்டும் 60 பேர் பலி..

கடந்த 18ம் தேததிவரை, இந்தியாவில் 4 கோடி மக்கள் எந்தவிதமான தடுப்பூசியும் செலுத்தாமல் இருக்கிறார்கள். இவர்கள் யாரும் ஒரு டோஸ் தடுப்பூசி கூட இதுவரை செலுத்திக்கொள்ளவில்லை” எனத் தெரிவித்தார்
 

click me!